SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தற்காலிக பஸ்நிலையத்தில் சீரமைப்பு பணி ஜரூர்

2019-07-22@ 13:14:39

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், வருகிற 31ம் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி வருகிற 27ம் தேதி முதல் 1ம் தேதி வரை 6 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனையொட்டி, வண்டிப்பண்ணை என்னும் இடத்தில் தற்காலிக பஸ்நிலையம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியை சிவகாசி ஆர்டிஓ தினகரன், வத்திராயிருப்பு தாசில்தார் சரஸ்வதி ஆகியோர் பார்வையிட்டனர். இப்பகுதியில் காவல்நிலையம், போக்குவரத்து துறை, வருவாய்த்துறை சார்பில் தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.

குறுகிய சாலையால் அவதி:தாணிப்பாறை விலக்கில் இருந்தும், மகாராஜபுரம் விலக்கிலிருந்தும் தற்காலிக பஸ்நிலையம் வரை சாலை குருகியதாக உள்ளது. இதனால், எதிரெதிரே வரும் பஸ்கள் விலக முடியவில்லை. எனவே, சாலையை அகலப்படுத்த வேண்டும்.
நேர்த்திக்கடன் செலுத்த வருவோர் அவதி:கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவோர் வண்டிப்பண்ணை மற்றும் மந்தித்தோப்பு பகுதி தோட்டங்களில் தங்கி ஆடு, சேவல்களை பலியிட்டு சுவாமிக்கு படையலிட்டு, அன்னதானம் செய்கின்றனர். இவர்களது வாகனம்தாணிப்பாறை விலக்கிலேயே நிறுத்தப்படுவதால், சமையல் பாத்திரங்கள், பூஜைப்பொருட்களை தலையில் தூக்கிக் கொண்டு, 5 கி.மீ தூரம் நடந்து வண்டிப்பண்ணை பகுதிக்கு வருகின்றனர். எனவே, வெளியூர் பக்தர்கள், சமையல் செய்யும் தோட்டம் வரை வாகனம் செல்ல போலீசார் அனுமதிக்க வேண்டும்.தாணிப்பாறை விலக்கிலிருந்து வனத்துறை கேட் வரை மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்