SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விபத்து நடக்கும் இடத்தில் தடுப்புகள் இல்லை தேவையில்லாத இடத்தில் போக்குவரத்து காவல் கூண்டு: விருதுநகரில் பொதுமக்கள் குற்றச்சாட்டு

2019-07-22@ 13:14:37

விருதுநகர்: விருதுநகரில் விபத்து நடக்கும் புல்லாக்கோட்டை ரோட்டில் சேதமான தடுப்புகளை சீரமைக்காமல், விபத்தே நடக்காத இடத்தில் பணத்தை கொட்டி போக்குவரத்து காவல் பூங்கா அமைப்பதாக பொதுமக்களும், போலீசாரும் குற்றச்சாட்டுகின்றனர்.
விருதுநகரின் நுழைவுப் பகுதியில் செல்லும் நான்குவழிச்சாலையில் புல்லலாக்கோட்டை சந்திப்பில் கிழக்கு, மேற்கு பாண்டியன் காலனி, பாலாஜி நகர், லட்சுமி நகர் பகுதி மக்கள் தினசரி கடந்து நகருக்குள் வந்து செல்கின்றனர். பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் நூற்றுக்கணக்கில் காலை, மாலை கடந்து பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.நான்குவழிச்சாலையில் மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் வேகமாக கடப்பதால் தினசரி விபத்து நடந்து வருகின்றன. இந்த சந்திப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வாகனங்களின் வேகத்தை குறைக்க நான்குவழிச்சாலையில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

தரமற்ற பேரிகார்டுகளில் வாகனங்கள் மோதி பல உடைந்து நெளிந்து கிடக்கின்றன. கலெக்டர் அலுவலகம் எதிரே நான்குவழிச்சாலையில் வைக்கப்பட்டது போல தரமான கனமான பேரிகார்டுகளை வைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்டநாளாக இருந்து வருகிறது.இந்நிலையில், நகரின் நுழைவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் உள்ள காலியிடத்தை போலீசார் ஆக்கிரமித்து போலீஸ் பூங்கா என்ற ஒரு அமைப்பை உருவாக்க கடையினரிடம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.நகரின் நுழைவுப் பகுதியில் நெரிசல் இல்லாத இடத்தில், அமைக்கப்பட்டுள்ள பெரிய கூண்டால், நகருக்குள் இருந்து நான்குவழிச்சாலைக்கு வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்பட வழிவகும்.எனவே, மாவட்ட போக்குவரத்து காவல்துறை உயரதிகாரி, விபத்து நடக்கும் இடங்களில் விபத்து நடக்காமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன் நகரில் சிவகாசி முக்கு, பாத்திமாநகர் முக்கு, அல்லம்பட்டி முக்கு ரோடு பகுதிகளில் தேவையற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள மூடிய நிலையிலான போலீஸ் பெட்டிகளை அகற்ற வேண்டும். இவற்றில் போலீசார் இல்லாத இரவு நேரங்களில் தேவையற்ற நிகழ்வுகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்