SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை: கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு

2019-07-22@ 12:25:59

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை; வாக்கெடுப்பிற்கு முன்னதாக கட்சிகள் தங்கள் எம்எல்ஏவுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கலாம் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணியில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அரசுக்கு ஆதரவு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். இதனால், ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது. இதன் காரணமாக கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சட்டசபையில் கூட்டணி அரசின் பலத்தை விட எதிர்க்கட்சியான பா.ஜனதாவின் பலம் அதிகமாக உள்ளது. பா.ஜனதாவின் பலம் 2 சுயேச்சைகளுடன் சேர்த்து 107 ஆக உள்ளது.

இதன் காரணமாக கர்நாடகாவில் கடந்த 2 வாரங்களாக உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அன்று  சட்டசபையில் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என அறிவித்தார். அதைதொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதலமைச்சர் குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீது 2 நாட்கள் விவாதம் நடந்தது. கவர்னர் 2 முறை கெடு விதித்தும், வாக்கெடுப்பு நடக்கவில்லை. ஆளுநர் விதித்த கெடு தமக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியிருப்பதாக முதல்வர் குமாரசாமி பேரவையில் தெரிவித்தார். இச்சூழலில் அவையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து சட்டப்பேரவை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே, இன்று மாலை 5.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான ஆர்.சங்கர், நாகேஷ் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரிக்க வேண்டும் அவர்கள் கூறியிருந்தனர். ஆனால், அவசர வழக்காக இன்று அதை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று வெள்ளிக்கிழமையே தெரிவித்துவிட்டேன் என சபாநாயகர் கூறியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு மேலும் 2 நாட்கள் குமாரசாமி அவகாசம் கோரிய நிலையில் கர்நாடக சபாநாயகர் அறிவித்துள்ளார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக கட்சிகள் தங்கள் எம்எல்ஏவுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கலாம். கொறடா உத்தரவு அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicoworldrecord268

    நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

  • sudanflood26

    சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்