SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறைந்த விலையில் வெளிநாட்டு கரன்சி தருவதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து பல லட்சம் நூதன மோசடி: வடமாநில பெண்கள் உள்பட 8 பேர் கைது

2019-07-22@ 00:06:41

சென்னை: வெளிநாட்டு கரன்சியை குறைந்த விலையில் தருவதாக கூறி, பேப்பர் கட்டுகளை கொடுத்து பல லட்சம் மோசடி செய்த 2 வடமாநில பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பர்வாஸ் அலாம் (32). சவுகார்பேட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு டெல்லியை சேர்ந்த சுமன் (30) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆகினர்.இந்நிலையில், கடந்த 18ம் தேதி பர்வாஸ் அலாமை சந்தித்த சுமன், என்னிடம் 27 லட்சம் மதிப்புள்ள சவுதி அரேபியா கரன்சி உள்ளது. அதை இந்திய பணமாக மாற்றுவதற்கு காலதாமதம் ஏற்படும். தற்போது எனக்கு அவசரமாக 3 லட்சம் தேவைப்படுகிறது. எனவே, நான் வைத்திருக்கும் கரன்சியை உங்களிடம் தருகிறேன். அதற்கு பதிலாக 3 லட்சம் தாருங்கள். நான் பணத்தை திருப்பி தந்ததும், சவுதி கரன்சியை பாதி தந்தால் போதும், என கூறியுள்ளார். இதற்கு பர்வாஸ் அலாம் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, சுமன் ஒரு பெட்டியில் சவுதிஅரேபியா கரன்சி கட்டுகளை கொண்டு வந்து பர்வாஸ் அலாமிடம் கொடுத்துவிட்டு, 3 லட்சத்ைத பெற்றுச் சென்றார். சிறிது நேரம் கழித்து, பர்வாஸ் அலாம் அந்த கரன்சி கட்டுகளை எடுத்து பார்த்தபோது, மேலே மட்டும் சவுதி பணம் இருந்துள்ளது. கீழே காகிதம் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக சுமனை செல்போனில் தொடர்புகொண்ட போது, சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர்,  இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கேளம்பாக்கத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்த சுமனை கைது செய்தனர். விசாரணையில், மேற்கு டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 9 பேர் கொண்ட கும்பல் கடந்த 5 வருடங்களாக இதுபோன்று பல இடங்களில் லட்சக்கணக்கில் பண மோடியில் ஈடுபட்டிருப்பது  தெரியவந்தது. இதையடுத்து, சுமன் கொடுத்த தகவலின் பேரில், மேற்கு டெல்லி லட்சுமி நகரை சேர்ந்த மோகித் ஜாபர் (31), அனித் ஷேக் (30), பிலால் (20), ஷோகி டூல் (25) மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரபி (21), உத்திரபிரதேசத்தை சார்ந்த பாத்திமா பேகம் (30), பக்‌ஷி பேகம் (30) ஆகிய 8 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

 • WreckedTitanic2k19

  ஆழ்க்கடலில் உலோகம் உண்ணும் பாக்டீரியாக்களால் வேகமாக அழிந்து வரும் டைட்டானிக் கப்பலின் பாகங்கள்: புகைப்படங்கள் வெளியீடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்