SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிரம்பின் ‘கோ பேக்’ டிவிட்டர் எதிரொலி இந்து சாமியார் மீது அமெரிக்காவில் தாக்குதல்

2019-07-22@ 00:06:03

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார். ‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே’ என்ற ெகாள்கையில் விடாப்பிடியாக  இருக்கும் டிரம்ப், பிற நாடுகளில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் மீது எதிர்மறையான கருத்துக்களை கொண்டுள்ளார். இதன் காரணமாக அவ்வப்போது இனரீதியிலான கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார்.
‘ஜனநாயக கட்சியை (எதிர்க்கட்சி) சேர்ந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பி செல்ல வேண்டும்,’ என டிரம்ப் சமீபத்தில் டிவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார். இது விமர்சனத்துக்கு உள்ளானது. இதை கண்டித்து நாடாளுமன்றத்தில் அவர் மீது கொண்டு வரப்பட்ட தீர்மானமும் வெற்றி பெற்றது.

இதனிடையே, நியூயார்க்கின் புளோரல் பார்க் பகுதியில் இந்து சாமியார் சுவாமி ஹாரிஸ் சந்தர் புரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த தாக்குதலில் சாமியாரின் உடல், முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டிரம்ப்பின் ‘கோ பேக்’ டிவிட்டரை தொடர்ந்து, சாமியார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்