SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறைப்பறவையின் முகத்தை காட்டி இலை கட்சியை துண்டாட நினைக்கும் கிப்ட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-07-22@ 00:05:30

‘‘கட்சி கரை வேட்டி கட்டாத அதிகாரி என்று மாங்கனி மாவட்ட மக்கள் யாரை சொல்றாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சட்டசபை, கட்சி பொதுக்கூட்டங்களில் தங்கள் தலைவரை புகழ் பாடுறதுல நான்தான் பெஸ்ட்னு எம்எல்ஏக்கள், கட்சியினர் போட்டி போட்டு பேசுவாங்க. ஆனா உங்களவிட நான்தான் நல்லா பேசுவேன்னு, சேலம் விவிஐபி மாவட்டத்து உயரதிகாரி நேற்று நடந்த அரசு விழாவுல பேசியே கலக்கிட்டாராம். சொந்த மாவட்டத்துல நடந்த ரிங்ரோடு திறப்பு விழாவுல சேலம்காரர் நேத்து கலந்துக்கிட்டாரு. சமீபத்தில கோட்டை மாவட்டத்துல இருந்து மாறுதலாகி வந்த மாவட்ட உயரதிகாரிக்கு இதுதான் முதல் விழா. எல்லோரையும் வெல்கம் பண்ண வந்தவரு, முதல்  நிமிஷம் சேலம் விவிஐபியை சரமாரியாக புகழ்ந்து தள்ளிட்டாராம். பல்வேறு சிறப்புக்கு சொந்தக்காரர், மக்கள் இதயங்களில் வீற்றிருக்கும் எளியவர், விவசாய குடும்பங்களின் தலைமகன்னு அடுக்கடுக்கா பேசி அசர வச்சாராம். மாவட்டத்துக்கு வந்து முதல் பங்ஷன்லயே இப்படி முத்திரைய பதிச்சுட்டாரு, நம்மளும் இதுக்கும் ஒருபடி மேல பேசணும்னு எம்எல்ஏக்கள் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்... பதவி வேண்டும் என்றாலும் நீடிக்க வேண்டும் என்றாலும் இப்படி பேசினால் தான் வேலை ஆகும் போல... பேசாம அந்த அதிகாரி கட்சி கரை வேட்டி கட்டிக் கொண்டு இப்படி பேசி இருக்கலாம் என்பதே மக்களின் பேச்சாக இருக்கு...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ரோடு போடாம போட்டதாக பணம் வாங்குறத கேள்வி பட்டு இருக்கோம். கழிவறையே கட்டாமல் பணம் சுருட்டிய ஊர் இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அணைக்கட்டு ஒன்றியத்தில் மலை கிராமங்களில் ஏற்கனவே கழிவறை கட்டாமலேயே அதற்கான நிதியை சுவாகா ெசய்த விவகாரம் தொடர்பாக தொகுதி திமுக எம்எல்ஏ சட்டமன்றத்தில் கேள்வி கேட்ட விவகாரத்தை தொடர்ந்து அந்த முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை தற்போது நடந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட பிடிஓவான சங்க கால சோழ மன்னன் ஒருவனின் பெயரான கிள்ளியானவர், பீஞ்சமந்தை ஊராட்சியில் 7 தனிநபர் கழிவறைகளை கட்டாமலேயே பில்லை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இவர் வேலூர் ஒன்றியத்தை சேர்ந்த மலை கிராமத்தில் இதேபோன்று நடந்த முறைகேட்டில் 17பி நோட்டீஸ் வழங்கப்பட்டு சமீபத்தில் மாறுதலாகி சென்ற கலெக்டரை சந்தித்து நோட்டீஸ் தொடர்பாக விளக்கம் அளித்து அதையடுத்து இடம் இல்லாததால் கழிவறை கட்டவில்லை. அதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏதுமில்லை என்று கூறி வெறும் எச்சரிக்கையுடன் விடப்பட்டுள்ளார். ஆனால் அந்த நிதி எங்கே என்பது அதிகாரிகளுக்கே வெளிச்சம் என்பதுதான் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக ஊழியர்கள் பேசிக் கொள்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேறென்ன விவகாரம் இருக்கு’’‘‘வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்த பேரூராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட 65 போர்வெல்களில் 44 போர்வெல்களில் பைப்புகள், மோட்டார்கள் திருடுபோச்சாம். தண்ணீர் பிரச்னை பூதாகரமானபோதுதான் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் அதிர்ச்சியில் இருக்காம். இதுதொடர்பாக யாரை கேட்பது, யார் மீது புகார் கொடுப்பது என்பது தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறதாம்... இருந்தாலும் புகார் கொடுக்கவில்லை என்றால் நம்மளை திருடனாக நினைத்துவிடுவார்கள்... உயரதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிட்டு காணாமல் போன மோட்டர்கள் குறித்து போலீசில் புகார் கொடுக்க திட்டமிட்டு இருக்காங்களாம்... மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள்... மக்கள் பணத்தில் வாங்கிய பொருப்பில் அசட்டையாக இருப்பது சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.‘‘ இலைக்கு எதிரா உறுதி எடுத்த கலெக்டரை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மமா.‘‘குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 1800 குளங்களை குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வார அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 186 குளங்கள் தூர்வாரப்படுகின்றன. ஆனால் தூர்வாருதல் என்ற பெயரில் மணல் கொள்ளைதான் நடக்கிறது. பாசனத்திற்கு தகுந்தவாறு குளங்களை தயார்படுத்தாமல் 15 அடி ஆழத்திற்கு மணல் அள்ளிச் செல்வதில்தான் கும்பல் தயாராக உள்ளது என கலெக்டரிமே விவசாயிகள் படபடவென்று பேசி விட்டனர். அதிகாரிகளின் ஆசியுடன் மணல் கொள்ளை போவதாக விவசாயிகள் படபடத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கலெக்டரும் முறைகேடு நடந்தால் பணம் வழங்க மாட்டோம் என கிடுக்கிப்பிடி போட்டுள்ளார். இலையை பகைச்சிட்டு கலெக்டர்கள் நிலையை நாம தான் கண்கூடாக பார்க்கிறோமே... இந்நிலையில் இலையை பகைச்சுகிட்டு எப்படி அவர் பணம் தராமல் இருப்பாருன்னு பார்ப்போம் என்று மற்றொரு தரப்பு மார்தட்டிக் கொண்டிருக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கிப்ட் தரப்பு சிறைப்பறவையை வெளியே கொண்டு வர ஏன் இப்படி துடிக்கிறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘உள்ளாட்சி தேர்தலுக்குள் நன்னடத்தை அடிப்படையில் சிறைப்பறவையை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கிப்ட் தரப்பு நினைக்குது... உள்ளாட்சி தேர்தல் வரும் பட்சத்தில் சிறைப்பறவையுடன் நெருக்கமாக இருந்த இலை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவி பெற்றவர்கள் மீண்டும் தன்னை உருவாக்கியவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறைப்பறவை பக்கம் வரலாம். அப்புறம் நடக்கும் பொதுக்குழு, செயற்குழுவில் தன் ஆட்கள் மூலம் கலாட்டா செய்து கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது கிப்ட்டின் திட்டம். அதற்கு சிறைப்பறவையின் முகம் தேவைப்படுகிறது. அதுதான் காரணம். அவருடைய முகத்தை பார்ப்பவர்கள், நேரடியாகவோ, ரகசியமாகவே ஆதரவு தெரிவிக்கலாம். சிறைப்பறவை சொன்னதை செய்வாராம். யாரையும் ெதால்லை தர மாட்டாராம். ஆனால் கிப்ட் பணம் கேட்டும்... கெத்து காட்டியும் கட்சி நிர்வாகிகளை மட்டுமில்ல.. ரத்த சொந்தங்களை கூட விரட்டிவிடுவாராம்... அதனால் நம்மளை யாரும் நம்ப மாட்டாங்க... சிறைப்பறவையை வைச்சுதான் இலையை பிச்சு எடுக்கணும்னு தொண்டர்கள் மத்தியில் புலம்பி வருகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்