SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட், நெக்ஸ்ட்...

2019-07-21@ 04:08:13

நாட்டில் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் முதல் முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதும் வாக்குறுதி அளித்தது. இதையடுத்து, முதல் பணியாக மருத்துவக் கல்வியில் சேர்ந்து படிக்க நீட் என்ற நுழைவுத் தேர்வு கட்டாயப்படுத்தியது. இதற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நீட் தேர்வை ஏன் வேண்டாம் என்று தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கூறியது என்றால், நாட்டில் சிபிஎஸ்இ என்ற கல்வித் திட்டமும், மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலான கல்வியும் கற்பிக்கப்படுகிறது. தமிழக மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெறுவது என்பது பகீரத முயற்சியாக போனது. சிபிஎஸ்இ, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சமமான வாய்ப்பு தர வேண்டும் அதுவே சரியான அணுகுமுறையாகும்.

இந்த பாரபட்சமான தேர்வு முறையை சரி செய்யும் எண்ணம் மருத்துவக் கல்வித் துறைக்கு ஏன் தோன்றவில்லை என்று தெரியவில்லை. இந்த பிரச்னை நீடித்து வரும் நிலையில் தற்போது, எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி ஆண்டு தேர்வு தேசிய அளவில் ஒரே மாநிரியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சரியான நடவடிக்கைதான் என்று ஒரு சாரார் கூறினாலும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவக் கல்வி பாடத்திட்டத்தை கொண்டு வந்து அமல்படுத்திய பின்னர் இதுபோன்ற தேர்வை நடத்தலாம்.மருத்துவக் கல்வியில் முதுநிலை படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு அமல்படுத்த முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்புக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், மருத்துவ பட்டப்படிப்பு கல்விக்குழு, மருத்துவ பட்டமேற்படிப்பு கல்விக்குழு, மருத்துவக் கல்வி மதிப்பீடு-தர நிர்ணய குழு, மருத்துவ நன்னெறி மற்றும் பதிவு குழு என 4 தன்னாட்சி அமைப்புகளை கொண்டதாக இந்த மருத்துவ ஆணையம் இருக்கும். மருத்துவ ஆணையமும், அதைச் சார்ந்த 4 குழுக்களும் நிலையான மற்றும் நவீன மருத்துவ கல்விக்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் தரத்தை உயர்த்த மேற்கொள்ளப்படுகின்றது என்று கூறியபோதிலும், தங்களது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்வி பயின்று மாநில மக்களுக்கு சேவை செய்வார்கள் என்ற நோக்கத்தில்தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கியது. ஆனால், சமசீராக இல்லாத நீட் என்ற தேர்வு முறையை அமல்படுத்தி மருத்துவக் கல்வி என்பதையே எட்டாக் கனியாக மாற்றியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. மாநிலங்களின் உரிமையை எல்லாம் ஒவ்வொன்றாக பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவது கூட்டாட்சி ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

 • rayil21

  ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

 • coronaa_vugaan11

  கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

 • pakistan21

  பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்