SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூரில் குவிந்துள்ள குருவிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-07-21@ 04:06:51

‘‘கோவை பாரதியார் பல்கலைக்கழக மேட்டர் என்னாச்சு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 4 வருஷத்துக்கு முன்பாக விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு நடந்தது. இதுெதாடர்பாக விசாரணை நடத்துகிறோம் எனக்கூறி இந்த மேட்டரை அப்படியே குழிதோண்டி புதைத்து விட்டாங்க. இந்த விவகாரத்தில் சிக்கிய பல அதிகாரிகள், பேராசிரியர்கள் பணி ஓய்வும் பெற்றுவிட்டனர். ஆனாலும், விசாரணை கமிஷன் முடிவு எதுவும் வெளியே வரவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரைக்கும் ஐந்து விசாரணை கமிஷன் அமைச்சிட்டாங்க... ஆனால், ஒன்றில்கூட அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது, ஆறாவது விசாரணை கமிஷன் அமைச்சிருக்காங்க... அதுவும் செயல்படாமல் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது. இதற்கு டீ, காபி, முந்திரி, பிஸ்தா சாப்பிட்ட கணக்கு மட்டும் வந்து பில் செட்டில் ஆகுது. மற்றபடி விசாரணை தூங்கி வழிகிறது. இப்பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் லஞ்சம் வாங்கி கைதாகி சிறை சென்ற வழக்கும் இதே நிலையில்தான் இருக்கு. வருடம் இரண்டு கடந்துவிட்ட பின்னரும் குற்றப்பத்திரிகை விவகாரம் இழுபறியாகவே உள்ளது. பாரதியார் பெயர் கொண்ட இப்பல்கலைக்கழக புகழ், வீதியெங்கும் நாற்றம் அடிக்கும் அளவுக்கு உள்ளது என்று கல்வியாளர்கள் வருத்தப்படுகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எல்லாம் வேலூருக்கு ெபட்டி கட்டி கிளம்பிட்டாங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘ம்.. சட்டசபை முடிந்தது. இப்போது இலையின் மானப்பிரச்னையாக வேலூர் மக்களவை தேர்தல் மாறி இருக்கிறது. தாமரைக்கு எதிராக அடித்த அலையில் இலை விழுந்தது என்று சொன்னார்கள். இப்போது தாமரை ஸ்டிராங்காக உட்கார்ந்துவிட்டது. இலையுதிர்காலம் போல 110ல் எக்கச்சக்க திட்டங்களை வாரிவிட்டு இருக்காங்க... இப்போதும் ஜெயிக்கவில்லை என்றால் தாமரை நம்மளை மதிக்காது என்று சிலர் சேலம், தேனிக்காரர் காதில் ஊதி விட ேநற்று மாலையே சிலர் சொந்த ஊருக்கு ேபாயிட்டு மூட்டை முடிச்சுடன் வேலூருக்கு வர்றோம்னு சொல்லிட்டு போயிருக்காங்க... சிலர் நேரடியாக வேலூருக்கு போயிருக்காங்க... அவங்களுக்கு எல்லாம் பக்கத்து தொகுதியில பக்கத்து மாவட்டத்துல ரூம் போட்டு தயாராக வைச்சிருக்காங்க... லிஸ்ட்டும் கையில போய் சேர்ந்துடுச்சாம்... இரண்டாவது முறையாக கரன்சி மழை கொட்டும் என்ற நினைப்பில் கட்சிக்காரங்க வழி மேல் விழி வைத்து காத்திருக்காங்க... ஆனால் வேலூர் மக்கள் நிலைதான் பாவம்... இப்போது அமைச்சர் வர்றார் வழிைய மூடுங்க... அமைச்சர் வர்றார் ஒதுங்கி நிலுங்க என்ற கணக்கில் பிரசாரம் இருக்கப்போகுது... இதனால   மக்கள் டிராபிக்ஜாமில் சிக்கி திணறுவாங்க... இனி அதைவிட மோசமாக இருக்கப்போகிறது என்று சமூக ஆர்வலர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியில எந்த மாவட்டத்துல கும்மாங்குத்து நடக்குதாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குடிமராமத்து பணியை விவசாயிகள் ேபார்வையில் இலை தரப்பே எடுத்து செய்றதுல பெரிய பஞ்சாயத்தே நடக்குது. அதாவது தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் நடக்கும் குடிமராமத்து பணியில், பெரும் வருவாய் பார்க்கும் நோக்கில் இலை தரப்பினர் விவசாயிகள் என்ற பெயரில் பணி பெறுவதில் கடும் மோதல்கள் நடந்துக்கிட்டிருக்கு... மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கப்பலூர் பெரிய கண்மாயும் குடிமராமத்தின் கீழ் தூர்வாரப்படுது... இதுக்காக மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு இலை தரப்பை சேர்ந்த ஊராட்சி செயலாளரான ‘கடவுள்’ பெயர் கொண்டவர் வந்திருந்தாரு... இவர் முன்னாள் பஞ்சாயத்து பெண் தலைவரின் கணவராம்... இதேபோல், இலை கட்சியின் முன்னாள் ஒன்றிய பெண் கவுன்சிலரான, ‘நெருப்பை’ முதல் எழுத்தாகக் கொண்ட பெயருடையவரும் வந்திருந்தாரு... இரு தரப்பினரும் தங்கள் ஆதரவாளர்கள் சிலரை சங்கம் அமைத்து ‘விவசாயிகள்’ என்ற பெயரில் அழைச்சிட்டு வந்திருக்காங்க.... இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் முன்னிலையிலேயே இலை தரப்பினரான இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கைகலப்பு வரை போயிருக்கின்றனராம்... இந்த மோதல் தெரிஞ்சு விவிஐபியாக இப்போது உள்ள உதயமானவரு இரு தரப்பினரையும் அழைத்து பேசி, சமாதானம் பண்றதுக்குள்ளே போதும், போதும்ணு ஆயிருச்சாம்... உதயமானவரு முன்னிலையில் சமாதானம் ஆனாலும், இருதரப்பிலும் புகைஞ்சுக்கிட்டே இருக்காம்... இவங்க பஞ்சாயத்தால அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தலையைப் பிய்ச்சுக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குருவிகளும் வேலூருக்கு பறந்து போய் இருப்பதாக சொல்றாங்களே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்.. யார் யார் எந்த பகுதியை பார்க்க வேண்டும். எவ்வளவு பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள் கடந்த தேர்தலிலேயே திரட்டப்பட்டுள்ளதாம். இதில் அனைத்து தரப்பையும் கரன்சியால் குளிப்பாட்டும் வகையில் இலை தரப்பில் இருந்து தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து குருவிகள் இறக்கப்பட்டு இருக்கிறதாம். அவர்களிலும் குறிப்பிட்டவர்களை மட்டுமே நிர்வாகம் அழைத்துள்ளது. காரணம், இவர்கள் பணப்பட்டுவாடா செய்த தொகுதியில்தான் இலை தரப்புக்கு அதிக ஓட்டுகள் கிடைத்ததாம். அந்த பட்டியல்படிதான் ஆட்களை அழைத்து இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-01-2020

  26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-01-2020

  25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

 • rp23

  நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்