SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடியூரப்பா முதல்வராக வேண்டி 1001 படிகள் ஏறிய பாஜ பெண் எம்பி

2019-07-20@ 00:51:37

மைசூரு: ஆடி வெள்ளியை முன்னிட்டு மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு 1001 படி ஏறி வந்த மக்களவை பாஜ  எம்பி. ஷோபா கரந்தலாஜே,  எடியூரப்பா மறுபடியும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: சட்டபேரவை கூட்டத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத முதல்வர் எச்.டி.குமாரசாமி, புறவாசல் வழியாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் உடனே பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும்.அதே போல், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பேரவை தலைவருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். முதல்வர் குமாரசாமி, காங்கிரசார் ஆகியோர் உச்ச நீதிமன்றம், மாநில ஆளுநர், ஜனநாயகத்துக்கு மதிப்பு அளிக்கவில்லை.
கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களை யாரும் கடத்திச் செல்லவில்லை. கடத்தி செல்ல அவர்கள் குழந்தைகள் கிடையாது. அவர்களுக்கு அரசு மீது அதிருப்தி ஏற்பட்டதால் இது போன்ற முடிவு எடுத்துள்ளனர். இதை அவர்களே உறுதிப்படுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்