SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைதுக்கு முன்பும்.. கைதுக்கு பின்பும்.. ‘என்கவுன்டர்’ ரவுடி கல்லறையில் போலீசை புகழ்ந்து கானா பாடல்: டிக்டாக் டிரெண்டிங்கில் முதலிடம்

2019-07-20@ 00:29:59

சென்னை: சென்னை ராயப்பேட்டை பி.எம் தர்கா பகுதியில் கடந்த 2018 ஜூலை 2ம் தேதி நள்ளிரவு தனியாக சென்ற இளம்பெண்களை சிலர் கேலி செய்வதாக ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.  அதன்படி தலைமை காவலர் ராஜவேலு தனியாக விசாரணைக்கு சென்றபோது பி.எம் தர்கா பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆனந்த் காவலரை 2 கிலோ மீட்டர் தூரம் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினான். இதனால் உதவி கமிஷனர் சுதர்சனன் தலைமையில் போலீசார் என்கவுன்டரில் ரவுடி ஆனந்தை சுட்டு கொன்றனர். கடந்த 3ம் தேதி ரவுடி ஆனந்தின் முதலாமாண்டு நினைவு நாளில் சுடுகாட்டில் அவரது கல்லறை முன்பு ரவுடிகள் 8 பேர் ‘டிக் டாக்’ செயலியில், ‘‘எங்களுக்கு சாதி மதம் வேணா... ஆனந்த்  அண்ணனுக்கு அன்பு மட்டும் போதும்... ஆமாம் பா  ஆமாம்..... வந்துட்டேன்டா..... வந்துட்டேன்டா... எங்கள் ஆனந்த் அண்ணனை கொலை செய்தவனை போட வந்துட்டேன்டா... சோ... எங்கு இருந்தாலும் தேடி பிடித்து அடிப்பேன்டா... மட்ட  ஒன்னு அடிப்போன்டா’’ என கானா பாடல் பாடினர். இது தமிழகம் முழுவதும் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து காவல் துறையை எச்சரித்து கானா பாடல் பாடி டிக்டாக் செயலியில் பதிவு செய்த பல்லாவரம் அனகாபுத்தூர்  கென்னடி நகர் முதல் தெருவை சேர்ந்த மணிகண்டன் (எ) சேட்டு (29), திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ்குமார் (18), திருவல்லிக்கேணி ரோட்டரி நகரை சேர்ந்த விஜய் (21), ராயப்ேபட்டை பி.எம் தர்கா 3வது தெருவை சேர்ந்த சமீர் பாஷா (22), திருவல்லிக்கேணி ரோட்டரி நகரை சேர்ந்த கார்த்திக் (எ) காவா கார்த்திக் (25), பிரசாத் (23) ஆகிய 6 ரவுடிகளை ராயப்பேட்டை போலீசார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையை கண்டித்து கானா பாடிய 6 ரவுடிகளும் ரவுடி ஆனந்த் கல்லறை முன்பு காவல் துறையை புகழ்ந்து கானா பாடல் பாடி டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இது ேநற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  அதில், ‘‘இரவும் பகலும் தூங்காமல் வேலை செய்பவர்... தன் குடும்பத்தையே மறந்து நம்மை காப்பாற்றுபவர்... நம் நண்பர்களோ யாருங்க... காவல் துறைதானுங்க... காவல் துறை இல்லையென்றால் சுடுகாடாகும் ஊருங்க... அதை மதிக்க ேவண்டும் நாமங்க... நம்ம காவலரின் பேச்சை மீறி செல்ல கூடாது... அவர்களை கெட்ட வழியில் நினைக்க கூடாது... தேவையில்லாத சோம்பேறியாக இருக்க கூடாது... பெற்ற தாய் தந்தையை நம்மதானே மதிக்க ேவனுங்க...’’ என்று பாடி உள்ளனர். இது, நேற்றைய டிக் டாக் செயலி டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2019

  15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்