SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக உட்பட 31 வேட்பு மனுக்கள் ஏற்பு: 19 மனுக்கள் தள்ளுபடி

2019-07-20@ 00:15:14

வேலூர்: வேலூர் மக்களவை தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. திமுக வேட்பாளராக கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்பட 50 பேர் மனுத்தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பகல் 11 மணியளவில் தொடங்கியது. கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சண்முகசுந்தரம் தலைமையில் தேர்தல் பொதுபார்வையாளர் சுதம் பண்டரிநாத், டிஆர்ஓ பார்த்தீபன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.  திமுக சார்பில் வேட்பாளர் கதிர்ஆனந்த்,  பொருளாளர் துரைமுருகன், மாநிலங்களவை எம்பி வில்சன், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோரும், அதிமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, வழக்கறிஞர் பாலச்சந்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மதியம் 2 மணி வரை வேட்பு மனு பரிசீலனை நடந்தது. முடிவில் 50 வேட்பு மனுக்களில் 31 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதுபற்றி, கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மக்களவை தொகுதியில் 50 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். ஒருவர் முறையாக மனுத்தாக்கல் செய்யாமல் எனது முகாம் அலுவலகத்திற்கு தபாலில் அனுப்பி வைத்திருந்தார். அந்த மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. 50 பேரில் 3 பேர் மாற்று வேட்பாளராகவும், 43 பேர் வேட்பாளர்களாக வும் மனுத்தாக்கல் செய்தனர். இதில் 19 வேட்பாளர்களின் மனுக்களில் ேபாதிய ஆவணங்கள் டெபாசிட் தொகை செலுத்தாதது, படிவம் இணைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. 31 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனு வாபஸ் பெற வரும் 22ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திமுக, அதிமுக மனு நிறுத்தி வைப்பால் பரபரப்பு
அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அங்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த ஒருவர், ஏ.சி.சண்முகம் ஒரு கட்சியின் தலைவர். ஆனால் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்தை பயன்படுத்துகிறார். அதனை தெளிவுபடுத்தி விளக்க வேண்டும். அவர் இரட்டை இலை சின்னத்தில் நிற்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து ஏ.சி.சண்முகத்தின் மனு பரிசீலனையை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.  தொடர்ந்து மற்றொரு வேட்பாளர் கொடுத்த புகாரின்பேரில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மனு மீதான பரிசீலனையையும், தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இருதரப்பும் விளக்கம் அளித்ததால் திமுக, அதிமுக மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicoworldrecord268

    நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

  • sudanflood26

    சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்