SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அத்தி வரதர் வைபவத்தில் தொடரும் உயிரிழப்புகள் தரிசனம் முடித்து வெளியே வந்தவர் மயங்கி விழுந்து சாவு: இரண்டு நாட்களில் 5 பேர் பலி

2019-07-20@ 00:15:12

சென்னை: அத்தி வரதர் வைபவத்தில் தரிசனம் முடிந்து வெளியே வந்த பக்தர் நேற்று திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இரண்டு நாட்களில் 5 பேர் பலியாகி உள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் கடந்த 1ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 17ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெறுகிறது. முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.கடந்த 19 நாட்களில் சுமார் 22 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.  அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமை சுமார் 2.50 லட்சம் பக்தர்கள், திருவோணம் நட்சத்திர நாளான நேற்று முன்தினம் சுமார் 2.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் கட்டுக்கடங்காத கூட்டத்தால் திடீரென நெரிசல் ஏற்பட்டு கிழக்கு கோபுரம் மற்றும் மேற்கு கோபுரம் பகுதியில் 31 பேர் மயங்கி விழந்தனர்.

அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் சேலம் ஆனந்த வேலு (50), சென்னை நடராஜன் (62), ஆவடியை சேர்ந்த சாந்தி (எ) நாராயணி (55), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கங்காதேவி (எ) கங்காலட்சுமி  ஆகியோர் பரிதாபமாக இறந்தனா். இந்நிலையில், நேற்று மாலை தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்த சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் (72) என்பவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு மருத்துவ உதவி மையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்