SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேத பரிசோதனைக்கு பின் சரவணபவன் ராஜகோபால் உடல் மகன்களிடம் ஒப்படைப்பு

2019-07-20@ 00:15:10

சென்னை: மருத்துவமனையில் மரணமடைந்த சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது.ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 2004ல் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.இதை எதிர்த்து 2009ல் உச்ச நீதிமன்றத்தில் ராஜகோபால் மற்றும் கூட்டாளிகள் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராஜகோபால், டேனியல் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் தமிழ்செல்வன், சேது, முருகானந்தம் ஆகியோருக்கு 3 ஆண்டும், பாலு, ஜனார்த்தன் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தும், ராஜகோபால் நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவிட்டது.இந்நிலையில், கடந்த 9ம் தேதி தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்து ராஜகோபால் சரணடைந்தார். அவரை மருத்துவ பரிசோதனை செய்து சிறையில் அடைக்க போலீசார் கொண்டு சென்றனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு உடல்நிலை மோசமானது.

வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் ராஜகோபால் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் மாலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.நேற்று காலை பொன்னேரி மாஜிஸ்திரேட் சதீஷ்குமார் முன்னிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனை முடிந்ததும், ராஜகோபாலின் உடல் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டு நேற்று மதியம் 2 மணி அளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவரது உடலை பெறுவதற்காக மகன்கள் மற்றும் உறவினர்கள் காத்திருந்தனர். பின்னர் நேற்று மாலை ராஜகோபாலின் உடல் அவரது மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், புன்னை நகருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்