SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய விவகாரம் 8 நாள் காவலில் 16 பேரையும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி: துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற என்ஐஏ அதிகாரிகள்

2019-07-20@ 00:15:09

சென்னை: புதிய அமைப்பை தொடங்கி இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய விவகாரத்தில், சிறையில் அடைக்கப்பட்ட 16  பேரை 8 நாள் காவலில் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்ஐஏ) அழைத்து சென்றனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள இஸ்லாமிய அமைப்பின் அலுவலகம் மற்றும் வேப்பேரியில் உள்ள இந்த அமைப்பின் அலுவலகம் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள அந்த அமைப்பின் தலைவரான சையது புகாரிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நாகை அருகே உள்ள சிக்கலை சேர்ந்த அசன் அலி மற்றும் அவரது உறவினரான மஞ்சக்கொல்லையை சேர்ந்த ஆரிஷ் முகமது ஆகியோர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து பல அதிர்ச்சி தரும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
 ‘அன்சுருல்லா’ என்ற புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதலை நடத்த உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிதி திரட்டியது, தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டது போன்றவற்றுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.அதை தொடர்ந்து சென்னையை சேர்ந்த சையது புகாரி மற்றும் நாகையை சேர்ந்த அசன் அலி அவரது உறவினர் அரிஷ் முகமது ஆகியோரை கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான சையது புகாரியை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணையில் வைத்துள்ளனர்.

 இதற்கிடையே சிரியாவில் பயிற்சி பெற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த 14 பேரும் அந்த நாட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்களை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த திங்கள் கிழமை இரவு டெல்லி விமான நிலையத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் 14 பேரையும் பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
 இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட 16 பேரையும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று காலை 11 மணிக்கு பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தூர்பாண்டியன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது நாட்டிற்கு எதிராக பல சதி திட்டம் தீட்டி இருந்ததால் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மனு மீதான விசாரணைக்கு பிறகு நீதிபதி செந்தூர் பாண்டியன் 16 பேரிடம் 8 நாள் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். மேலும், 16 பேரையும் வரும் 26ம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.அதைதொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 16 பேரையும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றனர். என்ஐஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பல அதிர்ச்சி தரும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்