SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திராவில் 3 பேரை நரபலி கொடுத்து ரத்த அபிஷேகம் செய்த 2 கொலையாளிகள் கைது: திடுக்கிடும் தகவல்கள்

2019-07-20@ 00:14:49

திருமலை: அனந்தபுரம் அருகே புதையல் எடுக்க கோயில் பூசாரி உட்பட 3 பேரை கொன்று லிங்கத்திற்கு ரத்த அபிஷேகம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் கதிரி அடுத்த தனகல்லு மண்டலம் கோரிகோட்டா கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவராமரெட்டி பூசாரியாக இருந்தார். மேலும், அவருக்கு உதவியாக அவரது சகோதரிகள் சத்யலட்சுமி, கமலாம்மா ஆகியோரும் கோயிலில் பணியாற்றி வந்தனர்.இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலை கோயில் வாசலில் சிவராமரெட்டி, சத்யலட்சுமி, கமலாம்மா ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். மேலும் கொலையான 3 பேரின் ரத்தம் சிவன் கோயில் மூலவர் மீதும், அங்குள்ள புற்று மீதும் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. புதையல் ஆசையால் மர்ம நபர்கள் 3 பேரையும் நரபலி கொடுக்க வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கதிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இச்சம்பவம் குறித்து அனந்தபுரம் எஸ்பி சத்யஏசுபாபு உத்தரவின்பேரில் 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அதே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.கடந்த 14ம் தேதி நள்ளிரவு இரு வாலிபர்களும் புதையலை எடுக்க சிவராமரெட்டியை நரபலிக்காக கொலை செய்துள்ளனர். அப்போது அவரது சகோதரிகள் இதனை பார்த்துவிட்டதால், சிவராமரெட்டியின் கொலையை வெளியே கூறிவிடுவார்கள் எனக்கருதி அவர்களையும், வெட்டிக்ெகாலை செய்து ரத்தத்தை அபிஷேகம் செய்தது தெரியவந்தது.இதையடுத்து, 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் வேறு யாராவது தொடர்பில் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும். ஓரிரு நாட்களில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்