கர்நாடகாவில் உச்சகட்ட அரசியல் குழப்பம்... சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்
2019-07-19@ 21:12:59

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். கடும், கூச்சல் குழப்பத்துடன் இன்று 8.30 மணி வரை அவை நடைபெற்றது. திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டதற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக மாநிலத்தில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ள 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் ஆளும்கட்சி பெரும்பான்மை பலமிழந்தது. முதல்வர் பதவி விலகக்கோரி பாஜவினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் முதல்வர் குமாரசாமி, தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு அனுமதி மற்றும் தேதி நிர்ணயம் செய்யும்படியும் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமாரிடம் கோரிக்கை வைத்தார். அதையேற்றுக்கொண்ட சபாநாயகர் ஜூலை 18ம் தேதி நம்பிக்கை வாக்குகோரும் தீர்மானம் கொண்டுவர அனுமதி வழங்கினார். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு பேரவை கூடியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்து பேசினார்.
இடையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பாயிண்ட் ஆப் ஆர்டர் கொண்டு வந்து, ‘‘காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பத்து பேர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இறுதி தீர்ப்பு வரும்வரை நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் ஒத்தி வைக்க வேண்டும்’’ என்றார். சித்தராமையா எழுப்பிய சட்டப் பிரச்னையால் பேரவையில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பகல் உணவு இடைவேளைக்கு பின் பேரவை கூடியதும் காகாவாட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சீமந்தபாட்டீலை பாஜவினர் கடத்தி சென்றுள்ளதாக அமைச்சர் டி.கே.சிவகுமார் பிரச்னை எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இடையில் கடும் வாக்கு வாதமும், மோதலும் ஏற்பட்டது. கடும் பிரச்சினைகளுக்கு இடையே நம்பிக்கை தீர்மானம் மீது கர்நாடக சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவிட்டார்.
நம்பிக்கை தீர்மானம் மீது கர்நாடக சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருவதால் மீண்டும் மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா 2-வது கெடு விதித்திருந்தார். நம்பிக்கை தீர்மானத்தின் மீது மேலும் பல உறுப்பினர்கள் பேச வேண்டியிருப்பதால் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் சபாநாயகர் கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
மேலும் செய்திகள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை : தீர்ப்பு குறித்து திமுக எழுப்பிய சந்தேகத்திற்கு உச்சநீதிமன்றம் பதில்
பெண்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது; சபரிமலையில் போலீசாரை நிறுத்துவதில் உடன்பாடு இல்லை; உச்சநீதிமன்றம்
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது? டிச.18-ம் தேதி அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்
மேக் இன் இந்தியாவை ரேப் இன் இந்தியா என கூறிய ராகுல் காந்திக்கு தண்டனை வழங்குக : மக்களவையில் பாஜக பெண் எம்பிக்கள் போராட்டம்
அசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டம் எதிரொலி : ஜப்பான் பிரதமர் இந்திய வருகை ரத்து?
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்
150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்
ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது