SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தற்கொலை செய்வோர் பட்டியலில் தேனி மாவட்டத்திற்கு 9வது இடம்

2019-07-19@ 15:22:15

* இதிலும் ஆண்களே அதிகம்

தேனி : மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்வோர் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், தேனி மாவட்டம் 9வது இடத்திலும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்வோர் பட்டியலில் தமிழகத்தின் தலைநகரான சென்னை முதலிடம் பெற்றுள்ளது. கோவை, நெல்லை, விழுப்புரம், தூத்துக்குடி, வேலுார், மதுரை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்கள் அடுத்தடுத்து முக்கிய இடங்களை பெற்றுள்ளன. தேனி மாவட்டம் 9வது இடத்தினை பெற்றுள்ளது. காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்கொலைகள் பெரிய அளவில் இல்லை. அதே நேரத்தில் கரூர், அரியலூர், சேலம், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நீலகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் தற்கொலைகள் மிக, மிக குறைவாக உள்ளன.

தொழில், வேலை வாய்ப்பு, மக்களின் வாழ்க்கை தரம், அடிப்படை பொருளாதாரம் அதிகம் உள்ள பகுதிகளே மிகப்பெரிய அளவில் தற்கொலை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து தமிழகம் முழுவதும் காவல்துறை தனி ஆய்வு நடத்தி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், `` குடும்ப பிரச்னை, பொருளாதார அழுத்தம், உறவினர்கள் தொல்லை, வாழும் சூழல் சார்ந்த அழுத்தம், ஏமாற்றப்படுதல், வேலை இழத்தல், தொழில் நஷ்டம், பொருளாதார இழப்பு, உறவுகளை இழத்தல் போன்ற பல காரணங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக தற்கொலை செய்து கொள்பவர்களில் அதிகம் பேர் ஆண்களாகவே உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் வாழ்வியல் சார்ந்த பயம் என்பது தெரியவந்துள்ளது.

அதேநேரம் பிரச்னைகளை எதிர்கொள்வதிலும், நெருக்கடி நேரத்தில் பிரச்னைகளை தெளிவாக கையாள்வதிலும் பெண்கள் உறுதியுடன் உள்ளனர். எனவே இது தொடர்பாக கவுன்சலிங் கொடுக்க பல்வேறு வழிமுறைகள், பல்வேறு நிர்வாக அமைப்புகள் இருந்தாலும், யாருக்கு நாம் என்ன சொல்லப்போகிறோம் என்பதில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுவதே தற்கொலைகளை தடுக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. கூட்டுக்குடும்ப உறவுகளில் இருப்பவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை’’ என்று கூறினர்.

தேனி மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்தின் தலைமை பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணகுமார் கூறுகையில்,`` மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களை விட, மனநோயால் பாதிககப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம். மனநோய்க்கு 104 வகையான காரணங்கள் உள்ளன. இதில் நான்கு வகை மனசிதைவு தான் சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிர சிக்கலில் தள்ளி விடும். இவர்களுக்கும் அதிகபட்சம் 3 முதல் 6 மாதங்களில் சிகிச்சை அளித்தாலே போதும். குறிப்பாக இயற்கையுடன் இணைந்து வாழப் பழகியவர்கள் எந்த சிக்கலிலும் சிக்குவதில்லை. இயற்கையை விட்டு விலகி வாழ்பவர்களே சிக்கலில் மாட்டுகின்றனர். இதனை டாக்டர்களால் மட்டுமே அறிய முடியும். மன உறுதியுடன் எதையும் எதிர்கொள்ளும் சூழலுக்கு பழகியவர்கள் எந்த சிக்கலிலும் குறிப்பாக தற்கொலை போன்ற காரணங்களில் சிக்குவதில்லை.

மாநில அரசு மாவட்ட மனநல திட்டத்தை செயல்படுத்தி பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் கவுன்சலிங் வழங்கி வருகிறது. பலவித மனஅழுத்தங்களுக்கு மருந்து, மாத்திரைகளே தேவைப்படாது. இவற்றை சரி செய்ய கொடுக்கப்படும் மாத்திரைகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.  எனவே, அரசு உருவாக்கி வைத்துள்ள வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனநல டாக்டர்களை சந்திப்பதிலும், அவர்களிடம் ஆலோசனை பெறுவதிலும் எந்த தவறும் இல்லை. இதுவும் ஒருவகை வாழ்க்கை முறைதான் என்ற பக்குவம் சமூகத்தில் உருவாகி விட்டால் தற்கொலைகளை எளிதில் தடுத்து விடாலாம்’’ என்று அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்