SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிதியுதவி அளிப்பதை உலக வங்கி திடீரென கைவிட்டதால் அமராவதி நகரை கட்டமைக்கும் சந்திரபாபு நாயுடுவின் கனவு திட்டத்திற்கு சிக்கல்

2019-07-19@ 14:11:41

ஹைதராபாத் : ஆந்திராவின் தலைநகராக அமராவதி நகரை கட்டமைக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கனவு திட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதை உலக வங்கி திடீரென கைவிட்டுள்ளது. காரணம் எதுவும் குறிப்பிடாமல் உலக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அமராவதி நகர் கட்டமைக்கும் திட்டத்தின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது. இந்த திட்டத்திற்காக விளைநிலம் கட்டாயப்படுத்தி கையகப்படுத்தப்படுவதாக ஏராளமான விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

மேலும்   கிருஷ்ணா நதிக்கரையில் இந்த திட்டத்தை செயல்படுத்த சுற்றுசூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் எதிர்ப்பை மீறி உலக வஙகி அமராவதி திட்டத்திற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிப்பதாக சந்திரபாபு நாயுடு அரசு கூறிவந்தது. அமராவதி திட்டத்திற்கு ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி 200 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க சம்மதித்து இருப்பதாக கூறப்பட்டது. அப்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நிதி கிடைப்பது கேள்விக்குறி ஆகி உள்ளது. இதனால் அமராவதி திட்டம் கைவிடப்படும் சூழல் உருவாகியுள்ளது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-09-2019

    20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • motor_strike1

    புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

  • jellifish_shapee1

    உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

  • malar_palam11

    கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்