SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தரபிரதேசம் சோன்பத்ரா சென்ற பிரியங்கா காந்தி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் கைது

2019-07-19@ 14:10:35

சோன்பத்ரா: உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ராவில் சொத்து தகராறில் நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தோடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் பகுதியில் சொத்து தொடர்பான பிரச்சனையால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 கோஷ்டிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதன் காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் இன்று 24 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இன்று சோன்பத்ரா சென்றுள்ளார்.

அப்போது அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், உயிரிழந்தோரின் குடும்பத்தை பார்க்க அனுமதிக்க முடியாது என கூறியுள்ளனர். இதையடுத்து அவர் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சோன்பத்ரா சொத்து தகராறில் இறந்தவரக்ளின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்றும், தன்னோடு 4 பேரை மட்டுமே அழைத்து செல்ல அனுமதி கேட்டதாக கூறினார். ஆனாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்க்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என கூறினார். இந்த நிலையில், ஏன் அவர்களை பார்க்க என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை எனக் கூறிய பிரியங்கா காந்தி, பாதிக்கப்பட்டோரை பார்க்க அனுமதிக்கும் வரை இங்கு அமைதியாக தர்ணா போராட்டம் நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சோன்பத்ரா காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்