SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அணை பாதுகாப்பு

2019-07-19@ 00:12:46

அணை பாதுகாப்பு மசோதா-2019க்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது தமிழகத்துக்கு சாதகமானதா அல்லது பாதகமானதா என்று பார்த்தால், இரண்டுமே கலந்ததாகவே தெரிகிறது. உலகில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிகளவில் அணைகள் உள்ளன. நாட்டில் இப்போது, 5254 அணைகள் உள்ளன. இவற்றில் 75 சதவீதம் 25 ஆண்டுகள் பழமையானவை. அணை பாதுகாப்பு மசோதாவில், இவை அனைத்தையும் பாதுகாக்க ஒரே மாதிரியான வழிமுறை கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணை பாதுகாப்புக்காக தேசிய கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படும். அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி கொள்கைகளை உருவாக்கும். அணை பாதுகாப்பு ஆணையம் அதை செயல்படுத்தும். இவை மத்திய, மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்.
ஒரு மாநிலத்தின் அணை, மற்றொரு மாநிலத்தில் அமைந்திருந்தால், பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்டவை குறித்த பிரச்னைகளை மாநில அணை பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தினால் இரு மாநிலங்களுக்குள்ளும் பிரச்னை ஏற்படும் என்பதால், அதை தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குதான் தமிழகத்துக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது இப்போது தமிழகத்துக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணை, கேரளாவில் அமைந்துள்ளது. தற்போது வரை அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளை தமிழக அரசு தான் செய்து வருகிறது. தேசிய அணை பாதுகாப்பு மசோதா சட்டம் ஆகும்போது, இந்த பணிகள் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் செல்லும். இதனால் தமிழகத்தினால், முல்லை பெரியாறில் எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது.அதேசமயம், கேரளாவும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தலையிட முடியாது என்பது ஆறுதலான விஷயம். ஆனால், இதிலும் கூட ஒரு சிக்கல் உள்ளது. தமிழகத்துக்கு சொந்தமான அணையில், எந்த பணியையும் மேற்கொள்ள முடியாமல், தமிழகம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், மத்தியிலும், மாநிலத்திலும் கொள்கை ரீதியாக ஒத்துவராத கட்சிகளின் ஆட்சி நடக்கும்போது பிரச்னைகள் எந்த ரூபத்தில் வரும் என்பதை கணிக்க முடியாது.அந்தந்த மாநிலங்களிடம், அவற்றுக்கு சொந்தமான அணைகளின் பராமரிப்பை விடுவதே பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும் வழியாகும். ஆனால், இங்கு பிரச்னைகளை தடுக்கிறோம் என்ற போர்வையில், புதிய பிரச்னைக்கு வழிவகுக்கப்பட உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2019

    17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-11-2019

    16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • jet15

    1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

  • amgun

    அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

  • zimbabwe_elephant111

    ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்