SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாட்டுல மழை இல்லை என்றாலும் மதுரை மழையில் நனையும் அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-07-19@ 00:10:01

‘‘என்ன விக்கி புகார் கொடுத்தாலும் ஐடி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லையாமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. இதனால் தொகுதியில் தேர்தல் விதிகள் அமலில் உள்ளது. மேலும் தேர்தல் பறக்கும்படையினர், நிலைக்கண்காணிப்பு குழுவினர் இலைகட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளை விட்டுவிட்டு அப்பாவிகளான வியாபாரிகளிடம் அதிகளவில் பணத்தை பறிமுதல் செய்து கணக்கு காட்டி வருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணம் பதுக்கல் குறித்து புகார்கள் தெரிவித்தாலும் ஐடி அதிகாரிகள் சரியாக ரெய்டு நடத்துவதில்லையாம். இவர்களின் கைகளை கட்டிப்போட்டது யார் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஐடி அதிகாரிகள் ரெய்டில் பாரபட்சம் காட்டுவதாக வேலூர் மக்களவை தொகுதி மக்கள், அரசியல்வாதிகள், தன்னார்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு வைத்திருந்த ெபண் எஸ்ஐ நிலவரம் என்னாச்சு...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அதுவா, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கடந்தாண்டு நவம்பர் மாதம் கஞ்சா கடத்தி வந்த காரை மடக்கி பிடித்து அதிலிருந்த 170 கிலோ கஞ்சாவை போதை தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். முக்கிய குற்றவாளியான ஆந்திராவை சேர்ந்த சத்தியமூர்த்தி ரெட்டி உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இந்த வழக்கின்போது திருச்சி போதை தடுப்பு பிரிவில் (என்ஐபி) ெபண் எஸ்ஐக்கும் வந்தபோது அவருக்கும், பிரவீன்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அப்போது பீமநகரில் இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பில் வசித்து வரும் எஸ்ஐயின், வீட்டுக்கு பிரவீன்குமார் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதுபற்றி மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஏற்கனவே புகார் சென்றது. எஸ்ஐயை கண்காணித்து வந்துள்ளனர். இதில் எஸ்.ஐ கஞ்சா கடத்தல்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாம். அதனால் எஸ்பி அவரை சஸ்பெண்ட் செய்துட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோவை மாநகாரட்சி விவகாரம் ஒன்னு இருக்கிறதா சொன்னாயே..’’‘‘கோவை மாநகராட்சி சார்பில் சமீபத்தில் ஐந்து சொகுசு ஜீப் வாங்கப்பட்டது. இதில், ஒன்று கமிஷனர் வீட்டில் நிற்கிறது. இன்ெனான்று துணை கமிஷனர் வீட்டில் நிற்கிறது. மூன்றாவது ஜீப்  சிட்டி இன்ஜினியர் வீட்டிலும், நான்காவது ஜீப்  நிர்வாக பொறியாளர் வீட்டிலும் நிற்கிறது. இவர்களுக்கு, ஏற்கனவே அரசாங்கம் சார்பில் வழங்கப்பட்ட சொகுசு வாகனங்கள் இருக்க, தற்போது மேலும் ஒரு புதிய சொகுசு ஜீப் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஐந்தாவதாக வாங்கப்பட்ட ஜீப்பை காணவில்லை. இது, யார் வீட்டில் இருக்கிறது என்ற கணக்கே இல்லை. மத்திய அரசு சார்பில் ‘ஸ்மார்ட்சிட்டி'''' திட்டத்தின்கீழ் கோவை மாநகராட்சிக்கு ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதை, முறையாக பயன்படுத்தி, மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செய்யாமல், ஜீப் வாங்கினோம், கார் வாங்கினோம் என மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது மாநகராட்சிக்கு வாடிக்கையாகிவிட்டது. ஏற்கனவே, கோவை மாநகராட்சி கஜானா காலியாக இருக்கிறது எனக்கூறி ஒப்பந்ததாரர்கள் பலருக்கு பில் செட்டில் செய்யப்படவில்லை. அத்துடன், சமீபத்தில் சொத்து வரி கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி வரிகளை வாரி சுருட்டி, மக்கள் பணத்தை வீணாக்கி, அதிகாரிகளின் பாக்கெட்டுகளை நிரப்பும் அதிகாரிகளை மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேலூரில் உள்ள தோல் தொழில் நகரில் உள்ள அதிமுகவில் பூகம்பம் வெடிச்சு இருக்காமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அண்மையில் ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோல் தொழில் நகரத்து ஆளுங்கட்சி பிரமுகர் மீது தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிகட்சி வேட்பாளருக்கு எந்தவித வேலையும் செய்யவில்லை. அவர் சார்ந்த சமூக ஓட்டுகளையும் வாங்கித்தரவில்லையாம். மேலும், அவருடைய ஓட்டையே தன் கட்சிக்கு போட்டாரா அல்லது வேறு கட்சிக்கு போட்டாரா என்ற சந்தேகம் இன்னும் இலை கட்சி பிரமுகர்களுக்கு இருக்கு...  இவரை எம்பியாக்கியது கட்சிக்கோ, தொண்டருக்கோ எந்தவித லாபமும் இல்லை என்பதே தற்போதைய உள்ளூர் அதிமுகவில் ஒலிக்கும் குரல்..எம்எல்ஏ, அமைச்சராக இருந்தபோதே எதுவும் செய்யவில்லை. டெல்லிக்கு போய் என்ன செய்யப்போகிறார் என்று அதிமுக நிர்வாகிகள் புலம்பி தள்ளுகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வேறென்ன வில்லங்கம் இருக்கு..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா  நகர மாநகராட்சியில் தெற்கு மண்டல உதவி கமிஷனராக, ‘ஆறுபடையப்பனின்’ பெயரை  பின்னால் கொண்ட ‘ஆறெழுத்து’ அதிகாரி ஒருத்தர் இருக்காரு... இவருக்கு  டெபுடேஷன் அடிப்படையில் இப்பதவிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  நியமிக்கப்பட்டாராம்... மாநகராட்சியில் சும்மாவே பணம் கொட்டும்... இங்கு  வரும் யாரும் மாறிச்செல்லவே விரும்ப மாட்டார்கள் என்பது தெரிஞ்ச  விஷயம்தானே... இவரும் அப்படித்தான்... பண மழையில நனைஞ்சுக்கிட்டே  இருந்தாரு... உதவி கமிஷனர் மீதான எந்த  புகாரையும் உயர் அதிகாரிகள் கண்டுக்கிறதே இல்லையாம்... திடீரென உதவி கமிஷனருக்கு,  மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு கிடைத்ததாம்... ஆனால், அவரோ  மாநகராட்சியை விட்டுப்போனால், கமிஷன் போயிருமோங்கிறதை யோசித்து, பதவி  உயர்வை தூக்கி எறிய முடிவு செஞ்சாராம்... இதுக்காக சென்னை வரை சென்று பதவி  உயர்வை நிறுத்தி வைத்து விட்டு, மீண்டும் மாநகராட்சி உதவி கமிஷனராக பணியை  தொடர்கிறாராம்... இதுபோல அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால்தான் மாநகராட்சியில்  வளர்ச்சிப்பணிகள் நன்றாக நடக்கும்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2019

  15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்