SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்னியாகுமரியில் ஷாஹர் ஹவாஜ் ஆபரேசன்: அதிவிரைவு படகில் மரைன் போலீசார் சோதனை

2019-07-18@ 20:42:35

கன்னியாகுமரி: மும்பை தாக்குதலுக்கு பிறகு கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் 6 மாதத்திற்கு ஒரு முறை ஷாஹர் ஹவாஜ் ஆபரேஷன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆபரேஷனின் போது போலீசாரே தீவிரவாதிகள் போல போலி வெடிகுண்டு, போலி  துப்பாக்கிகளுடன் கடல் வழியாக வந்து ஊடுருவுவார்கள். இப்படி ஊடுருவுகின்றவர்களை ஆபஷேனில் இருக்கும் போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். இந்த ஆபஷேன் இன்று காலை கன்னியாகுமரியில் தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஆபரேஷன் நாளை மாலை 6 மணிக்கு முடிகிறது. இதில் இந்திய கடற்படை, மாநில கடலோர பாதுகாப்பு படை, சட்டம் ஒழுங்கு போலீசார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 44 மீனவ கிராமங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இந்த காண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பின்பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் கடல் பகுதியில் தீவிர  சோதனை மேற்கொள்கின்றனர். அந்தவகையில் கடலுக்குள் சுமார் 12 நாட்டிக்கல் கடல் மைல் வரை சென்று சோதனை நடத்துகின்றனர். இந்த ஆபரேஷன் காரணமாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு உள்பட்ட சின்னமுட்டம், மகாராஜபுரம், மாதவபுரம், குளச்சல், முட்டம், தேங்காப்பட்டணம், உள்பட 6 செக்போஸ்ட்களிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்பட கடலோர பகுதிகளில் இந்த ஆபரேஷன் நடக்கிறது.

வாடகை படகில்...

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ரோந்து பணிக்கு மத்திய அரசு சார்பில் 3 அதிவிரைவு படகுகள் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த படகுகள் பழுதாகி கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு வருடம் ஆகியும் சரிசெய்யப்படவில்லை. இதன் காரணமாக இன்றைய ஆபரேஷனுக்கு மீனவர்களின் 2 படகுகளை வாடகைக்கு எடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சோதனை மேற்கொள்கின்றனர். இந்த நிலையை போக்க மத்திய அரசு நடடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • africaslavarieshouse

  1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

 • southwestchinaflo

  தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்