SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஜத-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர் அமளி காரணமாக கர்நாடக சட்டசபை நாளைக்கு ஒத்திவைப்பு...பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா

2019-07-18@ 18:56:12

பெங்களூரு: மஜத-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கர்நாடக சட்டசபை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காங்கிரஸ்- பாஜக உறுப்பினர்கள் அமளியால் கர்நாடக சட்டப்பேரவை அரை மணி நேரம்  ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீமந் பாட்டிலை பாஜக.வினர் கடத்தி சென்றதாக அமைச்சர் சிவக்குமார் பேசியதால் அவையில் அமளியானது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி  ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். மேலும் அவர்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கக்கோரி 15 அதிருப்தி  எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில், ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.

இருப்பினும், நியாயமான காலவரையறைக்குள் 15 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மேலும்  இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில்  கலந்து கொள்வது குறித்து எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியது. இதையடுத்து இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், கலந்து கொள்ளப் போவதில்லை என அதிருப்தி எம்.எல்.ஏ.க்க ளும் அறிவித்து விட்டனர்.

சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம்:

இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே, கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடியது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக விவாதம்  தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது முதலமைச்சர் குமாரசாமி சட்டப்பேரவையில் காரசாரமாக பேசினார். இன்றைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என அழுத்தம் தரக்கூடாது என தெரிவித்தார். இதையடுத்து  சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் கமிட்டி சட்டப்பேரவை குழு தலைவர் சித்தராமையா நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். எம்.எல்.ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு கொறடா  உத்தரவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் கட்சித்தாவல் சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது எனவும்  தெரிவித்தார்.

எம்எல்ஏ-க்கள் அமளியால் அவை ஒத்திவைப்பு:

மேலும் தங்கள் எம்.எல்.ஏ-க்களை பாஜக கடத்தி விட்டதாக கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் புகார் தெரிவித்தனர். நேற்றுவரை எங்களுடன் இருந்த எம்.எல்.ஏ ஸ்ரீமத் பாட்டீல் தற்போது மும்பையில் உள்ளார். அவரை பாஜக கடத்திவிட்டது  எனக்கூறி எம்.எல்.ஏ-வின் புகைப்படங்களை காட்டி அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் பாஜக மோதலையடுத்து அவை அரைமணிநேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவு:

இந்த நிலையில், கர்நாடக ஆளுநரை பாஜகவினர் சந்தித்து இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். பாரதீய ஜனதா கட்சி முறையயீட்டை அடுத்து ஆளுநரின் சிறப்பு அதிகாரி  சபாநாயகரை சந்தித்து பேச முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து, பாஜகவினரின் கோரிக்கையை அடுத்து, கர்நாடக சட்டசபையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு  தொடர்பாக சிறப்பு அதிகாரி மூலம் சபாநாயகருக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளார். ஆளுநர் அனுப்பிய அறிவுறுத்தலை சபாநாயகர் சட்டப்பேரவையில் படித்துக்காட்டினார்.

அவை நாளைக்கு ஒத்திவைப்பு:

சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் அனுப்பியதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து மஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து சட்டசபையை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக  சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் பேரவையிலேயே இரவு  முழுவதும் தங்க முடிவு செய்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்