SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறநிலையத்துறையில் ரியல்எஸ்ேடட் புரோக்கர்களாக மாறிய 3 பெண் அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-07-18@ 00:37:46

‘‘நீட் நிராகரிப்புக்கான காரணம் தெரியலையாமே உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சின்ன குழந்தையை கூட கேட்டால் தெரியும். ஒரே நாடு ஒரே தேர்தல் கோஷத்தை முன் வைத்துள்ள தாமரை தலைமை அதை முன் வைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக என்ஐஏவுக்கு உச்சபட்ச பவர். தபால் துறையில் இந்தி, ஆங்கிலம் தேர்வு என்று அறிவித்ததும் பிறகு பின் வாங்கியதும் அரசியல் நிர்பந்தம்தான். ஆனால் உண்மையில் அத்துறையையிலும் வடஇந்தியர்களை புகுத்தி ஒரே மொழி என்ற இலக்கை அடைவதுதான் இலக்கு. நீட் தேர்வு விஷயத்திலும் ஒரே இந்தியா... ஒரே மருத்துவம்... ஒரே மருத்துவ தேர்வு என்பதே அவர்களின் இலக்கு. அதனால்தான் நீட் மசோதாவை நிராகரித்து இருக்கிறார்கள். இதன் மூலம் நீட் தேர்வு இந்தியா முழுமைக்கும் ஒரே மருத்துவக் கல்வி என்ற முறையை கொண்டு வந்து இருக்கிறார்கள். இது ெதரியாமல் சேலம் விவிஐபி என்ன காரணத்துக்காக நீட் மசோதா ரத்து செய்யப்பட்டது என்று தெரியவில்லை என்று சொன்னது நம்பும்படியாக இல்லை என்று அவர்களின் கட்சி ெதாண்டர்களே பேசிக் கொள்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரியல் எஸ்டேட் தொழிலில் குதித்த அரசு பெண் அதிகாரிகள் குறித்து சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சேலத்தில் மூன்று பெண் அதிகாரிகளால் கோயில் நிலங்கள் மாயமாவதாக பக்தகோடிகள் புலம்புவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில், அவருக்கு கீழ் பணிபுரியும் மூன்று பெண் அதிகாரிகள், ஏகப்பட்ட முறைகேட்டில் ஈடுபட்டு கல்லாகட்டுறாங்களாம். கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று பக்தர்கள் புகார் தெரிவித்தால், அவர்கள் கூறுவது போல்,  ‘கோயில் நிலங்களே இல்லை’ என்று அரசுக்கு பதில் அனுப்புகிறார்களாம். இப்படி மறைமுகமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை நிற்கிறார்களாம். இதில் ஒரு பெண் அதிகாரி, வேறு ஊருக்கு பணிமாறுதல் பெற்றும், தனது செல்வாக்கால், சேலத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறாராம். இவர் பலதரப்பட்ட ஆக்கிரமிப்பு தொடர்பான கோப்புகளை அழித்ேத விட்டாராம். மற்றொரு அதிகாரி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நல்ல ஆலோசகராக இருந்து வருகிறாராம். இந்த மூன்று அதிகாரிகளும், பல ஆண்டுகளாக இதே அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதால், ஆக்கிரமிப்பு மற்றும் இதர கோப்புகளை கையாள்வதில் கில்லாடிகளாக இருக்கிறார்களாம். இந்த நிலை நீடித்தால் மிச்ச சொச்சமுள்ள கோயில் நிலங்களும் ‘ஸ்வாகா’ செய்யப்படுவது உறுதி என்று புகாருக்கு மேல் புகார் தெரிவித்து, பொங்கி வருகிறார்களாம் பக்த கோடிகள். கோயில் நிலங்களை இதுபோன்ற ரியல் எஸ்டேட் அரசு பெண் அதிகாரிகளிடம் இருந்து மீட்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிப்ட் புலம்பல் இன்னும் நிற்கவில்லை போல இருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிப்ட் பாக்ஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிங்க ஒவ்வொருத்தரா வெளியேறிக்கிட்டே இருக்குறதால, அதோட பொதுச்செயலாளரு ரொம்பவே நொந்து போயி, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காரு. ஆனாலும் எனக்கு எந்த பாதிப்பும் இல்லனு காட்டுறதுக்காக ஒவ்வொரு ஊரா போயி, நிர்வாகிகள சந்திச்சு ஆலோசன கூட்டத்த நடத்திட்டு வராரு. அதன்படி நேற்று முதல்வர் மாவட்டத்துல பேச வந்தவரு, தன்னோட ஆதங்கத்த முழுசா கொட்டி தீர்த்துட்டாராம். கூட்டத்துல பேச ஆரம்பிச்சதுல இருந்து, முடியற வரைக்கும் `நம்ம ஆளுங்க எப்படி வெளிய போனாங்க, எதுக்காக போனாங்க, கட்சியும் கரைஞ்சுகிட்டே போகுதுனு'''' புலம்பிகிட்டே இருந்துருக்காரு. நம்மிடம் இருந்தபோது தோற்றவர்கள் மாறியவுடன் தேர்தலில் ஜெயித்தது எப்படி என்று புரியாமல் மண்டையை குழப்பி வருகிறார்களாம். இதனால, தோல்வி விரக்தியில இருக்குற நமக்கு அண்ணன் நம்பிக்கையா பேசி, புத்துணர்ச்சி கொடுப்பாருனு வந்த தொண்டருங்களுக்கு பலத்த ஏமாற்றமாம். கரன்சியும் சேலத்துல கரை புரண்டு ஓடுவில்லையாம். இதனால டென்ஷனான நிர்வாகிகள் கிப்ட்காரரே இப்படி பேசுனா, நம்மளோட எதிர்காலம் என்ன ஆகும்னு தெரியலன்னு கூட்டத்துல கலந்துக்கிட்ட நிர்வாகிங்க புலம்பிகிட்டே இடத்த காலி பண்ணிட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சார்பதிவு அலுவலகத்தை மட்டும் குறிவைச்சு ரெய்டு நடப்பதின் பின்னணி என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘எல்லாம் மாமூல்தான். தமிழகத்துல தினமும் அதிக பணப்பரிமாற்றம் நடக்குற ஆபிசுங்க லிஸ்டுல, பத்திரவு பதிவு ஆபிசு முக்கியமான ஒன்னு. அதிகாரிங்க, பொதுமக்களைவிட புரோக்கருங்க நடமாட்டம் தான் அதிமாக இருக்கும். ஆடி மாசம் தொடங்குனா, அடுத்த ஒரு மாசத்துக்கு எதுவும் பண்ணமுடியாதுனு, கடந்த சில நாட்களாக, ஏராளமான பதிவுகள் வேக, வேகமாக நடக்குதுனு, தகவல் வெளியாச்சு. இதனால, எப்படியும் முறைகேடு நடக்கும்னு தெரிஞ்சுகிட்ட விஜிலன்ஸ் அதிகாரிங்க, நாமக்கல், கோவை, திருச்சி, சிதம்பரம் உள்பட 12 சப் ரிஜிஸ்டர் ஆபிசுல புகுந்து ரெய்டு நடத்தினாங்க. இதுல பெரிய அளவுல கட்டு, கட்டா பணம் சிக்கியதால, மத்த ஆபிசுல இருக்குற அதிகாரிங்க மத்தியில பீதிய கிளப்பியிருக்கு. சேலம் மாவட்டத்துல 22 சார் பதிவாளர் அலுவலகங்கள் இருக்கு. இதுல ஒருசில அலுவலகத்துல மட்டும் கடந்த ஒரு வாரத்துல ஏராளமான பதிவுகள் நடந்திருக்காம். இதையும் விஜிலென்ஸ் தரப்புல தெரிஞ்சுகிட்டதால, அடுத்த ரெய்டு இங்கதான்னு பேச்சு அடிபட்டுட்டு இருக்கு. இதனால என்ன விஷயமா இருந்தாலும் ஆபிசு பக்கம் வரவேண்டாம்னு, புரோக்கருங்களுக்கு சப் ரிஜிஸ்டருங்க தரப்புல இருந்து அன்பு கட்டளை போட்டுருக்காங்களாம். என்ன என்று விஷயம் கேட்டால் மேலிடத்துக்கு போக வேண்டிய பணம் போகவில்லையாம். அதனால்தான் ரெய்டு அடித்து அலற வைக்கும் முயற்சியில் இலை தரப்பு இறங்கி இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.     


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2019

  15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்