SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈஞ்சம்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் ஈமச்சடங்கு மண்டபம்: மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்

2019-07-18@ 00:11:30

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 196வது வார்டுக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் மயான பூமியில் எரிவாயு எரியூட்டகம் உள்ளது. இங்கு,  பஞ்சாப் யூத் அசோசியேஷன் ரெஜிஸ்டேட் (பியார்) என்ற அறக்கட்டளை சார்பில் சுமார் ₹30 லட்சம் மதிப்பீட்டில் ஈமச்சடங்கு செய்யும் மண்டபம், காத்திருக்கும் அறை, இருக்கைகள், வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக பார்க்கிங் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.
இதனை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு ஈமச்சடங்கு மண்டபம், காத்திருப்போர் அறை ஆகியவற்றை திறந்து வைத்தனர்.

இதில் பஞ்சாப் யூத் அசோசியேஷன் ரெஜிஸ்டட் நிறுவன உறுப்பினர்கள் தீபக் தவான், சஞ்சீவ் காலியா, பிரமாத் கலாரா, பியார் அறக்கட்டளை தலைவர் அஜய் ஆனந்த், செயலாளர் ஆர்யூத் தவான், தினேஷ் கட்யால்  மற்றும் உபயதாரர்கள் அசோக் எலாட்டி, சசி மல்கோத்ரா, கேப்டன் ரவி மகாஜன், ஹரிஷ் சங்கி, சுனில் ஹசிஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indo_red_ky111

    இது செவ்வாய் கிரகம் அல்ல!.. காட்டுத்தீ காரணமாக ரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்த இந்தோனேஷியா வான்பரப்பு

  • tower_denmark111

    டென்மார்க்கில் 45 மீட்டர் உயரத்தில் 1 கி.மீ. தூரம் சுழன்று செல்லும் படிக்கட்டுகளைக் கொண்ட டவர் : உற்சாகத்தில் சாகசப் பிரியர்கள்

  • nyuyark_hotelll1

    நியூயார்க்கில் ஏர்போர்ட் ஹோட்டல் : 512 சொகுசு அறைகளுடன் விமானத்தின் இறக்கைகளைப் போல வீற்றிருக்கும் பிரமாண்டம்

  • tapah_puyal11

    ஜப்பான், தென் கொரியாவை உலுக்கியெடுக்கும் சக்தி வாய்ந்த ‘தாபா’ புயல் : பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் வீடுகள் சேதம்

  • kenya_nairobi11

    கென்யா தலைநகர் நைரோபியில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 7 குழந்தைகள் பலி ;57 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்