SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று கடினமான பிரிவில் இந்தியா

2019-07-18@ 00:10:59

கோலாலம்பூர்: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்றில், இந்திய அணி கடினமான இ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அடுத்த பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் கத்தார் நாட்டில் 2022ம் ஆண்டு நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதற்கான ஆசிய தகுதிச் சுற்று (2வது ரவுண்டு) செப்டம்பர் 5ம் தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 40 அணிகள் 8 பிரிவுகளாக ரவுண்ட் ராபின் லீக் ஆட்டங்களில் மோதவுள்ளன.இந்த பிரிவுகளில் இடம் பெறும் 5 அணிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல், மலேஷியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி... பலம் வாய்ந்த கத்தார், ஒமான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளின் சவாலை சந்திக்கிறது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சீனாவில் நடைபெற உள்ள இறுதி தகுதிச் சுற்றில் பங்கேற்கலாம். மேலும், 2023ம் ஆண்டுக்கான ஏப்சி ஆசிய கோப்பை தொடருக்கும் தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தகுதிச் சுற்று குறித்து இந்திய கால்பந்து அணி தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறுகையில், ‘இ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் அனைத்துமே பலம் வாய்ந்தவை தான். இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்