SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் பேட்டி

2019-07-17@ 14:06:03

சென்னை : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் புவியரசன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுவதாவது; மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு 12 முதல் 20 செண்டி மீட்டர் வரை மழை பெய்யக் கூடும். கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 செ.மீ., கமுதி, பள்ளிப்பட்டு, பெரியகுளம், 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தேனி, நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 நாளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்