SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பான வழக்குகள் ஒரே நீதிபதிக்கு மாற்றம்: தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் பரிந்துரை

2019-07-17@ 01:10:32

சென்னை: தயாரிப்பாளர் சங்க நிர்வாகம், தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதிக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வந்த விஷால் தலைமையிலான அணி  மீது சில தயாரிப்பாளர்கள் அளித்த புகாரை ஆராய்ந்த பதிவுத்துறை, தயாரிப்பாளர் சங்கம் அளித்த விளக்கத்தில் திருப்தி இல்லாததால்சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியாக சென்னை மத்திய பதிவுத்துறை அதிகாரி சேகரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து  தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும், ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது,  விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக, பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் வெவ்வேறு நீதிபதிகள் முன்பு நிலுவையில் உள்ளதால்,  அனைத்து வழக்குகளையும் ஒன்றாக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது.இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் வேறு நீதிபதி முன் பட்டியலிடும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்