SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடிபணிந்தால்...?

2019-07-17@ 00:51:40

தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2 லட்சத்து 60  ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, பணி நிரவல்  மூலம் வேறு பள்ளிகளுக்கு  இடமாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில், 16 ஆயிரத்து 110  ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தெரியவந்தது. இவர்களில், 14 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள். இதில், பணி நிரவல் மூலம் 4 ஆயிரம் பேரை வேறு  பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து, மீதமுள்ள 10 ஆயிரம் பேரை பணியிறக்கம் செய்து, மாற்றுப்பணி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி வெளியிட்டது. கல்வித்துறையில் தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்துமாறு, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை,  மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதால், இந்த நடவடிக்கையை தமிழக அரசு ேமற்கொள்ள வேண்டியுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ், மாநில அரசுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில்  மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை முன்வைத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 15க்கும் குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை, அருகாமையில் உள்ள பிற பள்ளிகளுடன் இணைக்கும் பணி  நடந்து வருகிறது. இப்பணி நிறைவுபெற்றவுடன், உபரி ஆசிரியர்களை, ஆசிரியர் அல்லாத ஆங்கிலவழி கல்வி வகுப்புகளுக்கு இடமாற்றம் செய்யவும்,  அலுவல் பணிகளுக்கு பயன்படுத்தவும் தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் கவுன்சலிங் முறை ரத்து, நீட் தேர்வு அமல், மாநில அரசுகளின் வரி விதிப்பு முறை ரத்து, நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல், மாநிலங்களுக்கு ரேஷன் பொருள் ஒதுக்கீட்டு அளவு குறைப்பு, நீதிபதிகள் தேர்வு முறையில் மாற்றம், வாகன இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்வு, சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கான நஷ்டஈடு குறைப்பு, அணைகள் பாதுகாப்பு மசோதா, மானியங்கள் ரத்து, 100 நாள் வேலைக்கு முடிவு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிப்பு, பொது சிவில் சட்டம், மாநில அரசு பஸ்களில் இந்திமொழி திணிப்பு, அகில இந்திய அளவில் ஒரே ரேஷன் கார்டு என ஒவ்வொரு துறையிலும் மத்திய அரசு தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது, கல்வித்துறையிலும் மத்திய அரசு தனது அதிகாரத்தை நிலை நிறுத்தியுள்ளது. இந்த அபாய வலையில் இருந்து விடுபட்டு, மாநில அரசுகள் தங்களது தனித்தமையை நிலை நிறுத்தினால் மட்டுமே, சீர்திருத்த பணிகளை சுயமாக மேற்கொள்ள முடியும். இல்லையேல், மத்திய அரசுக்கு அடிபணிந்து, பல இழப்புகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

 • 13-12-2019

  13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்