SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு: கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என அச்சம்

2019-07-16@ 18:10:22

தேனி: தேனி மாவட்டம் கொட்டிப்புரம் அருகே நியூட்ரினோ ஆய்வு மையம் அமையவுள்ள அம்பரப்பர் மலையை பார்வையிட சென்ற விவசாய சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த மையம் அமையும் இடத்தில் பார்வையிடுவதற்காக அம்மையப்பர் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் சென்றபோது வழியிலேயே அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்திவிட்டனர். மேலும் இதுகுறித்து விவசாய சங்கத்தினர் ஒருவர் கூறியதாவது, இந்த திட்டமானது நடைமுறைக்கு வந்தால் இந்த கிராமங்கள் அப்புறப்படுத்தப்படும் என்று அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சம் இருப்பதாகவும், மேலும் இத்திட்டம் நிறைவேற்றக்கூடிய இடமானது துணை முதலமைச்சர் உடைய சொந்த தொகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  மேலும் அந்த கிராமத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால் பெரும் பேரழிவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் கிட்டத்தட்ட 200 விஞ்ஞானிகள் இங்கு பணியாற்றப்போகின்றதாகவும், 30 ஆயிரம் டிடக்டர்கள் இங்கு வைக்கப்படப்போவதாகவும், மேலும் 50 கிலோ டன் அளவிலான காந்தத்தை இங்கு வைக்கப்போவதாகவும் இதை தொடர்ந்து கிட்டத்தட்ட 3 மில்லியன் மின்னணு நலத்திட்ட சேனல்கள் இங்கு பொருத்தப்பட இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஒட்டுமொத்தமாக இது மிகப்பெரிய அறிவியல் ஆய்வுகூடமாக மாற போகிறது என்றும்,  இதனால் பேரழிவு ஏற்படும் என்பது தான் இங்குள்ள மக்களுடைய அச்சமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் அம்பரப்பர் மலையை சுற்றியுள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் போய்விடும் என்று வி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இதனை முற்றிலும் தடுக்க மாநில அரசனது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

  • 13-12-2019

    13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • erimalai_11

    தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

  • china_isaai1

    150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்

  • german_paanddaa1

    ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்