SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு 2017 செப்டம்பர் 22ல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

2019-07-16@ 17:51:38

சென்னை : நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற சட்ட மசோதாக்கள் 2017 செப்டம்பர் 22ல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை துணை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாக்கள்

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக கடந்த 2017ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை மசோதா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை மசோதா என இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு துறைகளுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்பட 4 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

2 மசோதாக்களும் நிராகரிப்பு

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு போது, 2017ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றதாகவும், அவற்றை 2017ம் ஆண்டு செப்டம்பரில் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்ததாகவும் மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும், இரு சட்ட மசோதாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலாளர் பதிலளித்ததாக, மத்திய அரசு வழக்கறிஞர்கள் கூறினர். இதையடுத்து, இந்த சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் பதில் மனு

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற சட்ட மசோதாக்கள் 2017 செப்டம்பர் 22ல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜூ எஸ் வைத்தியா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு :

*2017ம் ஆண்டு பிப்ரவரியில் அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா செப்டம்பரில்  நநிராகரிக்கப்பட்டது.

*நீட் தேர்வு விலக்கு மசோதா 2017 பிப்ரவரி 20ல் கிடைத்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் 22ல் திருப்பி அனுப்பப்பட்டது.

*2017 செப்டம்பர் 11ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக நீட் விலக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

*2017ம் ஆண்டு செப்டம்பர் 18ந் தேதி தமிழக அரசின் 2 நீட் விலக்கு மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

*குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்த 2 நீட் விலக்கு மசோதாக்கள் 2017 செப்டம்பர் 22ம் தேதி மத்திய அரசு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டது -

*2017ம் ஆண்டு செப்டம்பரில் நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு குறித்து தமிழக அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்தோம்.

*2 ஆண்டுகளுக்கு முன்பே நீட் விலக்கு மசோதாக்கள் அனுப்பப்பட்டுவிட்டதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்