SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எதிர்ப்புகளை பொருட்படுத்தாது தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்ய மத்திய அரசுடன் ஓ.என்.ஜி.சி.ஒப்பந்தம்

2019-07-16@ 17:49:12

டெல்லி: தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்ய மத்திய அரசுடன் ஓ.என்.ஜி.சி.ஒப்பந்தம் போட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோலிய துறை மற்றும் ஓ.என்.ஜி.சி. இடையே ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் கையழுத்தாகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டம்

இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் open acreage licensing என்ற கொள்கையை மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பது தான் இக்கொள்கையின் நோக்கமாகும். அதன்படி முதல்கட்ட ஏலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது.

அந்த ஏலத்தில் இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 55 இடங்களில் 41 இடங்களில் வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்தது. மீதமுள்ள இடங்களில் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றன. ஏலம் விடப்பட்ட 55 இடங்களில் மூன்று இடங்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றில் 2 இடங்களை வேதாந்தாவும், 1 இடத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனமும் பெற்றிருந்தது.

இந்த நிலையில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திறந்தவெளி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஏல அறிவிப்பு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் விடுக்கப்பட்டது.இதில் இரண்டாம் கட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் 474 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் 4 கிணறுகள் அமைப்பதற்கான அனுமதி இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மூன்றாம் கட்டத்தில் நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1863 சதுர கிலோ.மீட்டர் பரப்பளவில் 16 கிணறுகளுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் சுற்றுக்கு 474.9 ச.கி.மீ பரப்பளவில் மொத்தம் 4 கிணறுகள் மடப்புரம், திருப்பூண்டி, காரியாபட்டினம், கருப்பன்புலம் ஆகிய இடங்களில் அமையவுள்ளது. மூன்றாம் சுற்றுக்கு ப்ளாக் 1 நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியின் 459.83 ச.கி.மீ பரப்பளவில் கொள்ளிடம், திருத்தோனிபுரம், ஆனந்ததாண்டவபுரம், நீடூர், காளி, திருக்கடையூர், ரெட்டைக்குடி, தெனங்குடி, காரைக்கால் ஆகிய இடங்களில் அமையவுள்ளது. ப்ளாக் 2 ராமநாதபுரத்தின் 1403.41ச.கீ.மீ. பரப்பளவில் மொத்தம் 5 கிணறுகள் ராஜசிங்கமங்கலம், கொளுவூர், ராம்னாடு உள்ளிட்ட 5  இடங்களில் அமையவுள்ளது.

மேலும் 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்ய மத்திய அரசுடன் ஓ.என்.ஜி.சி.ஒப்பந்தம்

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்ய மத்திய அரசுடன் ஓ.என்.ஜி.சி.ஒப்பந்தம் போட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோலிய துறை மற்றும் ஓ.என்.ஜி.சி. இடையே ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் கையழுத்தாகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம், தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. நாகை மாவட்டம் மாதானம், கடலூர் மாவட்டம் புவனகிரியிலும் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.மாதானம் மற்றும் பந்தநல்லூரில் 3 கிமீ ஆழத்தில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. புவனகிரியிலும் நன்னிலத்திலும் 2 கிமீ ஆழத்தில் ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் 460 சதுர கிமீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்