SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தரமான சாலைகள் வேண்டுமானால் சுங்கக் கட்டணங்களை மக்கள் செலுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

2019-07-16@ 17:37:44

புதுடெல்லி: நல்ல தரமான சாலைகள் வேண்டுமென்றால் சுங்கச்சாவடி கட்டணங்களை மக்கள் முறையாக செலுத்த வேண்டும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி எம்.பி.க்களும் கேள்வி எழுப்பினர். ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் வெவ்வேறு விதமான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்தும் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். மேலும், சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல, சுங்கச்சாவடியில், அந்தந்த பகுதியில் செலுத்த வாய்ப்புள்ள கட்டணங்கள் தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும் காலத்திற்கு தகுந்தாற்போல், சுங்கக் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆனால், ஒருபோதும் இது முடிவுக்கு வராது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தரமான சாலைகள் வேண்டுமெனில், சுங்கக் கட்டணங்களை செலுத்தித்தான் ஆக வேண்டும் என நிதின் கட்கரி மக்களவையில் கூறியுள்ளார். அதேசமயம், சாலைத் திட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும், இந்த விஷயத்தில் மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். நேற்று, போக்குவரத்துத்துறை மீதான விவாதத்தின் போது, சில கடுமையான விதிகளை கொண்டு மோட்டார் வகையான சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில், ஆம்புலன்சுக்கு வழிவிடத் தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனையோடு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நெடுஞ்சாலைகள் மீதான விவாதத்தில், இது போன்ற அறிவிப்பை நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicoworldrecord268

    நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

  • sudanflood26

    சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்