அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்: சென்னையை தொடர்ந்து மேலும் 3 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த அரசு முடிவு
2019-07-16@ 17:27:57

சென்னை: சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா முழு உடல் பரிசோதனை மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம், கோவை, மதுரை, நெல்லை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், இதுவரை 33 ஆயிரத்து 631 நபர்கள் முழு உடல் பரிசோதனை செய்து பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அங்கு இதுவரை 6 ஆயிரத்து 323 பேர் பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த திட்டம் வரும் ஆண்டுகளில், கோவை, மதுரை, நெல்லை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம், 36 லட்சத்து 83 ஆயிரத்து 597 பேர் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 838 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், அரசு பொது மருத்துவமனைகளில் 15 லட்சத்து 34 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டலசுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிக்கை
ஐஐடி மாணவி தற்கொலை சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு : மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழஙகவும் ஐஐடிக்கு அறிவுரை
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான பேரணி: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி உள்பட ஏரளாமானோர் கைது
சென்னை நந்தம்பாக்கத்தில் தினகரன் நாளிதழின், ‘மாபெரும் உணவுத் திருவிழா’ தொடங்கியது
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் : 4 மாவட்டங்களில் போலீஸ் ரகசிய விசாரணை
பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையில் கட்டிய கோயில் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்
150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்
ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது