SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசாமில் கொட்டித்தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து விலங்குகளை மீட்கும் பணிகளில் வனத்துறையினர் மும்முரம்

2019-07-16@ 17:19:09

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கானது மனிதர்களை மட்டுமின்றி வனவிலங்குகளையும் பெரியளவில் பாதித்துள்ளது. இதை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காசிரங்கா தேசிய பூங்காவின் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில் ஏரளமான வனவிலங்குகள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து அசாமில் தொடர் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெள்ளத்தால் சுமார் 43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் புகழ்ப்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவின் 90 சதவீத பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின. இதை தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி இதுவரை 23 வன விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்நிலையில் விடுமுறையில் சென்ற அனைத்து வனத்துறை அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டு விலங்குகளை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து வெள்ளம் வடிந்த பகுதிகளில் மீட்கப்பட்ட விலங்குகளை கொண்டு சென்றுவிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் காண்டாமிருகங்களுக்கான சிறப்பு மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இதை தொடர்ந்து ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களுக்கு பெயர் பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவில் காண்டாமிருகங்கள் மட்டுமின்றி யானை, மான், புலி, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏரளமான வனவிலங்குகளும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicoworldrecord268

    நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

  • sudanflood26

    சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்