SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2 லட்சம் குறைவு: புள்ளி விவரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

2019-07-16@ 17:04:57

சென்னை: அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2,47,629 பேர் குறைவு என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவர ஆவணத்தில் இந்த தகவல் இருப்பதாக வெளியாகியுள்ளது. அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 1,67,929 பேர் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை  4,15,558 பேர் குறைவு என கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 12,10,055 மாணவர்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைத்து வருவருவதால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் அசுரத்தனமான வளர்ச்சியடைந்து வருகின்றன. எனவே அரசு பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், பள்ளிக்கல்வித்துறை தரப்பில் அரசு பள்ளிகளை மூடவில்லை என்றும் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதேபோல, அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை 5 லட்சமாக உயரும் எனவும் கூறியிருந்தார். இந்த சூழலில், சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்ற நாளன்று, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மானிய கோரிக்கை தொடர்பான புள்ளி விவர புத்தகம் வழங்கப்பட்டது. அதில், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் விவரிக்கப்பட்டிருந்தது. அதில், 2018-19ம் ஆண்டு வழங்கிய புள்ளிவிவர புத்தகத்தில் பக்கம் எண்:5 மற்றும் அதில் இந்தாண்டு வழங்கப்பட்ட புள்ளிவிவர புத்தகத்தில் பக்கம்எண்: 6 ஆகியவற்றை ஒப்பிடும்போது மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்