SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் திருவுருவப்படம்: வரும் 19-ல் முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்

2019-07-16@ 17:00:11

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் திருவுருவப்படம் வரும் 19-ம் தேதி மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். வன்னியகுல சத்திரிய பொதுச் சொத்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அகில இந்திய வன்னியக்குல சத்திரிய பேரமைப்பு சார்பில் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் முழு உருவப்படம் திறந்து வைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.  சுதந்திர போராட்ட வீரரும், மூத்த அரசியல்வாதியுமாக ராமசாமி படையாச்சியாருக்கு ஏற்கனவே  தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள நினைவு மணிமண்டபத்திற்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதைபோல், ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 16-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தப்படி ராமசாமி படையாச்சியாரின் திருவுருப்படம் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்படவுள்ளது. சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் அமரும் 5-வது மற்றும் 6-வது பாகத்துக்கு இடையே ராமசாமி படையாச்சியாரின் முழு உருவப்படம் அமைக்கப்படவுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்