SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மர்மநபரால் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

2019-07-16@ 16:52:06

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு அங்கிருந்த இளைஞர் ஒருவரால் கடத்தி செல்லப்பட்ட குழந்தையானது சற்று முன்னதாக பரங்கிமலை அருகே உள்ள ஒரு காப்பகத்தில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு போலீசார் தற்போது விரைந்துள்ளனர். இதை தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தையானது திருப்போரூர் அருகே ஒரு பொது இடத்தில் இருந்ததாகவும் மேலும் அந்த குழந்தையை கண்டுபிடிப்பதற்கு பலகட்ட நிலைகளில் போலீசார் முயற்சி எடுத்து வந்த நிலையில் இந்த குழந்தையானது அங்குள்ள பகுதி மக்களால் மீட்கப்பட்டு பரங்கிமலை அருகே ஒரு தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அங்குள்ள ரயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குழந்தையின் பெற்றோரை அழைத்துக் கொண்டு போலீசார் தற்போது அங்கு விரைந்துள்ளனர்.

மேலும் அந்த குழைந்தையானது பரங்கிமலை வழியே செல்லக்கூடிய இடத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் முன்னிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த விசாரணையையடுத்து மூன்று வயது சிறுவன் சோம்நாத் எனும் சிறுவன் பெற்றோரிடம் சற்று நேரத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது. இருந்தபோதிலும் நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில் நிலையம் 6வது நடைமேடையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையானது நேற்று வரை கிடைக்கப்படாத நிலையில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பல இடங்களில் தேடி வந்த நிலையில் பரங்கிமலை அருகே உள்ள ஒரு காப்பகத்தில் இருப்பதாகவும் அந்த குழந்தை மீட்கப்பட்ட தகவலையடுத்து ரயில்வே போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு பணியானது தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இன்னும் சிறிது நேரத்தில் அந்த குழந்தையானது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicoworldrecord268

    நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

  • sudanflood26

    சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்