SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

14ம் தேதி நடந்த தபால் தேர்வு ரத்து....இனி தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும்: ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

2019-07-16@ 16:13:52

புதுடெல்லி: தமிழக எம்.பி.க்களின் தொடர் போராட்டத்தை அடுத்து கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தபால்துறை தேர்வை ரத்து செய்வதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும் என மக்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். அஞ்சல்துறை தேர்வில், முதல் வினாத்தாள் தேர்வு இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்தந்த மாநில மொழிகளில் முதல் தாள் தேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தேர்வை தமிழில் நடத்த வலியுத்தினர். இதனிடையே, தபால்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது.

அந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அஞ்சல்துறை தேர்வை இந்தியில் நடத்தியதை கண்டித்து மாநிலங்களவையில் திமுக உள்ளட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதுபோல,இன்று காலை முதல் அதிமுக உறுப்பினர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதிமுக உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பிற்பகலில் அவை ஆரம்பித்த நிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட அனைத்து கட்சி  எம்.பி..க்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், தமிழகத்தில் தபால்துறை தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் இந்திய போட்டித்தேர்வு, ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் இந்தமுறை மறுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் தேர்வு எழுதிய பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே, இந்த புதிய முறையை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேபோன்று, அதிமுக எம்.பிக்களும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், தமிழக எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதையடுத்து, தமிழகத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுவதாக ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். மாநில மொழிகளை மதிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். எனவே தமிழக அரசின் கோரிக்கையையும், தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு ஞாயறு அன்று நடந்த தேர்வை ரத்து செய்ததோடு, அஞ்சல்துறை தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படுமென தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicoworldrecord268

    நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

  • sudanflood26

    சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்