SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்சநீதிமன்றத்தில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் Vs சபாநாயகர் காரச்சார விவாதம்.. நாளை இரு தரப்புக்கும் பாதகமில்லாத தீர்ப்பு கிடைக்குமா?

2019-07-16@ 15:39:11

புதுடெல்லி: கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் இரண்டு பக்கமும் நியாயம் உள்ளது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கருத்து தெரிவித்துள்ளார். ஆகையால் இரு தரப்புக்கும் பாதகமில்லாத உத்தரவைத்தான் பிறப்பிப்போம் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நம்பிக்கை அளித்துள்ளார்.

கர்நாடகாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்


கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி எம்எல்ஏ-க்கள் 16 பேர் ராஜினாமா செய்வதாகக் கூறி ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் வழங்கியுள்ளனர். ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்க மறுத்த நிலையில், ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. மேலும் அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. ஆகையால் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களை தகுதிநீக்கமும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டு இந்த வழக்கை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில், நாகராஜ், ரோஷன் பெய்க், சுதாகர், முனிரத்னா, ஆனந்த் சிங் ஆகிய 5 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை மற்ற அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த மனுக்களுடன் சேர்த்து ஒன்றாக விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்து இருந்தார்.அதன்படி இந்த மனுக்கள் நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  

அப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி,

முகுல் ரோஹத்கி:  எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை கடந்த 6ம் தேதியே வழங்கிய நிலையில், அதன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறார்.

முகுல் ரோஹத்கி: இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

முகுல் ரோஹத்கி: விருப்பதிற்குட்பட்டு ராஜினாமா கடிதம் கொடுக்கிறோம், எங்களை விருப்பத்திற்கு மாறாக செயல்பட சொல்ல சபாநாயகருக்கு உரிமை கிடையாது,

முகுல் ரோஹத்கி: ஒருவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தனிப்பட்ட காரணங்கள் ஆயிரம் இருக்கும்

முகுல் ரோஹத்கி: எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் முயற்சிக்கிறார்.ஆதலால் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் நிறுத்தி வைத்துள்ளார்.

கர்நாடக முதல்வர் தரப்பு : சபாநாயகர் எடுக்கும் முடிவு சட்டத்திற்கு புறம்பாக இருக்கும் பட்சத்தில் தான் உச்சநீதிமன்றம் தலையிட முடியும்.

கர்நாடக முதல்வர் தரப்பு: சபாநாயகரின் அதிகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது.

நீதிபதிகள் :  எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது

சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,

அபிஷேக் மனு சிங்வி : கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா பின்னணியில் பாஜக இருக்கிறது.  

அபிஷேக் மனு சிங்வி : அதிருப்தி எம்எல்ஏக்களில் 11 பேர் கடந்த 11ம் தேதி தான் சபாநாயகர் முன் ஆஜராகி ராஜினாமா கடிதம் அளித்தனர்.இதுவரை 4 எம்எல்ஏக்கள் நேரில் ராஜினாமா கடிதம் அளிக்கவில்லை.

அபிஷேக் மனு சிங்வி : தகுதி நீக்க நடவடிக்கையை தவிர்க்கவே கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்கிறார்கள்.

அபிஷேக் மனு சிங்வி : எம்எல்ஏக்கள் பெரும் தவறு புரிந்த நிலையில், சபாநாயகர் அவசரமாக முடிவு எடுக்க முடியாது.

அபிஷேக் மனு சிங்வி : சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.

நீதிபதிகள் : கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவிட்ட போது நீங்கள் மகிழ்ச்சியாக சென்றீர்கள்;

நீதிபதிகள் : இடைக்கால சபாநாயகரை நியமித்து 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது இதே உச்சநீதிமன்றம் தான் என்பதை மறந்துவிடாதீர்கள;

நீதிபதிகள் : ராஜினாமா கடிதம் சரியாக இருக்கிறது, பிறகு ஏன் சபாநாயகர் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்?

நீதிபதிகள் : அரசியல் சாசன அதிகாரங்களை எங்களுக்கு நினைவுபடுத்தும் சபாநாயகர் அதனை ஏன் பின்பற்றாமல் இருக்கிறார்?

நீதிபதிகள் : எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் ?

நீதிபதிகள் : எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தை நாடும் வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அபிஷேக் மனு சிங்வி : எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுப்பதா அல்லது தகுதி நீக்கம் செய்யப்படுபவர்களா என்பது குறித்து நாளைக்குள் பதில் அளிக்கிறோம்.

நீதிபதிகள் : கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் இரண்டு பக்கமும் நியாயம் உள்ளது.

நீதிபதிகள் : இரு தரப்புக்கும் பாதகமில்லாத உத்தரவைத்தான் பிறப்பிப்போம்.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,  3 நீதிபதிகள் அமர்வு இவ்வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்