SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

855 கிராம் எடையில் பிறந்த குழந்தையை 1 கிலோ 240 கிராம் வரை உயர்த்தி ஓசூர் அரசு மருத்துவர்கள் சாதனை

2019-07-16@ 14:57:45

ஓசூர்: ஓசூர் அருகே 855 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தையை 60 நாட்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பட்டவாரிபல்லியைச் சேர்ந்த விவசாயி பொட்டராஜ் என்பவருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தெளஜஸ்வினி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கர்ப்பிணியான தெளஜஸ்வினிக்கு 7 -வது மாதம் வலி வந்ததால் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த  மே 15-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் குறை பிரசவத்தில் பெண் குழுந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 850 கிராம் மட்டுமே இருந்ததால் குழந்தையாள் தாய் பால் குடிக்க முடியவில்லை. எனவே உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஓசூர் அரசு மருத்துவமனைக்கு தெளஜஸ்வினி அனுப்பி வைக்கப்பட்டார். குழந்தையின் நிலைமையை அறிந்த ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூபதி தலைமையிலான மருத்துவக்குழு, தொடர்ந்து 60 நாட்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து 1 கிலோ 240 கிராம் வரை எடையை அதிகரிக்க செய்துள்ளதால்  , தற்போது குழந்தை ஆயோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்