SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் அருகே ரவுடி பணம் கேட்டு மிரட்டியதால் ஹோட்டல் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

2019-07-16@ 12:35:25


சேலம்: சேலம் அருகே பிரபல ரவுடி பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. சேலம் அருகே பிரபல ரவுடி பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி ஹோட்டல் தொழிலாளி குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அயோத்தியாபட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இதை தொடர்ந்து அப்பகுதியில் சிறிய ஹோட்டல் ஒன்றையும் மணிகண்டன் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடன் பிரச்சனைக்காக அங்குள்ள பிரபல ரவுடி பிரபு என்பவரிடம் நிலத்தை அடமானம் வைத்து 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து இந்நிலையில் ரவுடி பிரபு பணத்தை தருமாறும் இல்லையெனில் சொத்தை எழுதி தருமாறும் மிரட்டல் விடுப்பதாக தெரிகிறது. மேலும் இதனை தொடர்ந்து இதுகுறித்து  காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்நிலையில் மணிகண்டன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவரை தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2019

    15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்