SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

2019-07-16@ 11:41:18

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கடந்த ஜூன் 28ம் தேதி கூடியது. தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை கைத்தறி மற்றும் துணிநூல்துறை, கதர் கிராமத்தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள் துறை, வேளாண்மைதுறை மானியக்கோரிக்கை நடந்தது. இந்த நிலையில் 13, 14ம் தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவில்லை. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது.

அஞ்சல் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர்.இன்றைய கூட்டத்தின் போது போக்குவரத்துத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழகத்தில் 7 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல் தெரிவித்தார். மாநில அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது எனவும் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

  • pakistan21

    பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்