SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக விஐபியின் தம்பியை உள்ளே தள்ளிய போலீஸ் உயரதிகாரியின் துணிச்சலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-07-16@ 02:32:16

‘‘திண்டிவனம்காரர் குதிரை பேரம் குறித்து பேசுவதை கவனிச்சிங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம். கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து பெரிய்ய்ய அறிக்கையை விட்டு இருக்கிறார். கூட்டணி இல்லாத காலத்தில் குதிரை பேரம் என்ற வார்த்தை அவரது அறிக்கையில் குறைந்தது பத்து இடங்களில் இருக்கும். நேற்றைய அறிக்கையில் நோகாத வகையில் அடித்து இருக்கிறார். தாமரை தரப்பு கோடிக்கணக்கான ரூபாய்களை இறைத்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதற்குள் செல்ல விரும்பவில்லை என்று தன் தோல்வியை தானே ஒப்புக் கொண்டிருக்கிறார். எல்லாம் கூட்டணி தர்மம்தான். இதே திண்டிவனம்காரர் கடந்த காலத்தில் கூட்டணி என்பது ேதர்தலோடு முடிந்துவிட்டது. அது தேர்தல் ஒப்பந்தம் என்று கூறுவார். இப்போது அந்த வார்த்தையையே மறந்துவிட்டார் போல... அதுதான் மத்தியில் எப்படியாவது மகனை மந்திரியாக்க இலைமறைகாயாக அறிக்கைவிட்டு சமாளித்து வருகிறார் என்று அவரது கட்சி தொண்டர்களே பேசிக் கொள்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலைகோட்டையில் ஏதாவது விஷயம் இருக்கா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘திருச்சி கோரையாறில் இரவு நேரத்தில் மணல் கடத்தலை தடுக்கவும், அந்த கும்பலை பிடிப்பதற்காகவும் கன்டோன்மென்ட் போலீஸ் உயரதிகாரி தலைமையிலான போலீசார் இரவு முழுவதும் தீவிரமாக கண்காணித்து வந்தார்களாம்.... சில தினங்களுக்கு முன்பு அந்த மணல் கடத்தல் கும்பலை கைது செய்த போலீசார், மணலை திருடி விற்ற பணம் ரூ.1.28 லட்சம், 2 லாரிகள், பொக்ளின் உள்ளிட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தார்களாம்... போலீசாரிடம் சிக்கிய கும்பல்களில் ஒருவர் அதிமுகவின் முக்கிய பிரமுகரின் தம்பியாம். இதில் கைது செய்யப்பட்டவர்களை லாட்ஜில் வைத்து தீவிர விசாரணை நடத்தினாராம்... விசாரணைக்கு பின் வழக்குபதிந்த அந்த உயரதிகாரி, அதிமுக முக்கிய புள்ளியின் தம்பியை எப்படியாவது சிறைக்கு அனுப்பியே தீர வேண்டும் என இருந்தாராம்.... தம்பியை எப்பாடியாவது வெளி கொண்டு வர அந்த அதிமுக முக்கிய பிரமுகரும் பல்வேறு முயற்சிகளை எடுத்தாராம்... லோக்கல் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை முயற்சி எடுத்தும் எந்தவித பலனில்லையாம்..
எதற்கும் அசராத அந்த போலீஸ் உயரதிகாரி அதிமுக பிரமுகரின் தம்பியை சிறைக்கு அனுப்பி விட்டாராம்... இதனால் வெறுத்து போன அந்த அதிமுக முக்கிய பிரமுகர், ஒரு காக்கியை சரி கட்ட தெரியவில்லை... இவர்கள் எல்லாம் எதற்கு அமைச்சர்களாக இருக்கின்றனர்.. அனைவரும் வேஸ்ட் தான் என நெருங்கியவர்களிடம் புலம்பி தள்ளினாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘திருட்டுக்கு உதவினா நல்ல அமைச்சர்... உதவாவிட்டால் வேஸ்ட்டா என்ன கொடுமை. சரி வேறென்ன விஷயம் இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளதால் அனைவரின் பார்வையும் அந்தத் தொகுதி மீது திரும்பியுள்ளது. வழக்கமாக காமராஜர் பிறந்த நாள் விழா தென் மாவட்டங்களில் களைகட்டும். இந்த முறை இடைத்தேர்தலை மனதில் வைத்து இலை தரப்பினர் களக்காட்டில் காமராஜர் சிலை இருப்பதால் அங்கு மாவட்ட செயலாளர் தலைமையில் மாலை அணிவிக்க திட்டமிட்டனர். இந்தத் தகவல் கிப்ட் தரப்பு காதில் விழ அவர்களும் உடனே களக்காடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க படையெடுத்து வந்து விட்டனர். எப்போதும் மாவட்ட தலைநகரில் மட்டுமே மாலை அணிவிக்கும் மாவட்ட செயலாளர்கள் இந்த முறை கிராம பகுதிக்கு கார்களில் படையெடுத்து வந்ததால் இரண்டு கட்சியினருமே குஷியாகி விட்டனர். எல்லாம் வருகிற நாங்குநேரி இடைத்தேர்தலை மனதில் வைத்துதான் என கட்சிக்காரர்கள் குஷியாக பேசிக்கொண்டனர். ஆனால் கிப்ட் நிர்வாகிகள் மாலை அணிவித்துச் சென்ற சிறிது நேரத்தில் ‘கிப்ட்காரர்'''' 2 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியில்லை என அறிவித்து விட்டார். இதனால் கிப்ட் நிர்வாகிகள் நொறுங்கிவிட்டதாக சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோவை மாநகராட்சியில அதிகாரிகள் விட்டால் போதும் என்று ஓட்டம் பிடிக்கிறார்களாமே...’’
‘‘ஆமா.. இந்த மாநகராட்சியில், கிழக்கு, ேமற்கு, தெற்கு, வடக்கு, சென்ட்ரல் என ஐந்து மண்டல அலுவலகங்கள் உள்ளன. இங்கு, உதவி கமிஷனரின் கீழ் பணிபுரியும் உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள் என உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் 3 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இவர்கள், கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணி புரிந்து வருகிறார்கள். ஆணி அடித்தாற்போல் ஒரே இடத்தில் பணிபுரிவதால், தங்களுக்கென வருவாய் ஆதாரங்களை உருவாக்கி, நன்றாக ‘செட்டில்'''' ஆகிவிட்டனர்.
அதனால், இவர்களை இடமாற்றம் செய்வது பெரிய சவாலாக உள்ளதாம். கட்டிட வரைபட அனுமதி, வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு, வரி விதிப்பு பெயர் மாற்றம் என பல்வேறு பணிகளில் கறாராக ‘சம்திங்'''' பெறுவதால், கரன்சி நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதுபற்றி மோப்பம் பிடித்த விஜிலென்ஸ் அதிகாரிகள் இரண்டு முறை ரெய்டு நடத்தியும் பலனில்லாமல் போச்சு. சமீபத்தில், மாநகராட்சி வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது, கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. இதில், கடும் கோபமுற்ற அவர், ‘ஹிட் லிஸ்ட்'''' அதிகாரிகள் பட்டியல் தயாரித்து வைத்துள்ளார். இவர்களை இடமாற்றம் செய்தே தீருவது என்ற முடிவில் தீர்க்கமாக உள்ளார். இவரது இந்த அதிரடி நடவடிக்கை மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. பலர், விடுமுறை எடுத்துவிட்டு, ஆளும்கட்சி வி.ஐ.பி. உதவியை நாடிச்சென்றுள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-01-2020

  27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-01-2020

  26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-01-2020

  25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்