SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூர் எலக்‌ஷன்ல வீரமான அமைச்சரை ஒதுக்கியது எப்படி என்று சொல்கிறார்: wiki யானந்தா

2019-07-15@ 00:19:16

‘‘வேலூர்ல என்னதான் நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தேர்தல் என்பதால் ேவட்பாளர்கள் மட்டும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். இன்னும் தேர்தல் என்ற உணர்வு தொண்டர்களிடையே வரவில்லை. எனவே, ரொம்ப மந்தமாகவே காணப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு பதில் வருமான வரித்துறையினர் செல்போன், வங்கியில் பணம் எடுப்பது, பைனான்ஸ், பார்சல்களை கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகின்றனர். சிறு தகவல் கிடைத்தாலும் அந்த வீட்டை ரவுண்டு கட்டி விடுகிறார்கள். அதே சமயம் இலை தரப்பில் அனைத்து அத்துமீறல்களும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அதிகாரிகள் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று செயல்படுவதாக புகார் எழுந்திருக்கிறது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேலூர்ல ஜெயிக்கிற பொறுப்ப வீரமானவர் கிட்ட விட்டதா சொல்றாங்களே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ம். அவரிடம் ஒப்படைத்த தொகுதிகளில் எல்லாம் இலை மண்ணை கவ்வியது. பணம் இருந்தால் மட்டும் போதாது தொண்டர்களை பக்குவமாக கையாள தெரிய வேண்டும். அது இல்லாத காரணத்தால்தான் ஒரு இடைத்தேர்தல் தொகுதி மற்றும் எம்பி தொகுதிகள் மொத்தமாக இலையை விட்டு கை நழுவி போனதாம். இதனால் உஷாரான வேட்பாளர் சேலம் விவிஐபியை பார்த்து அவர் இருக்கட்டும். என் சார்பில் நான் சிலரை இப்பணிக்கு பயன்படுத்திக் கொள்கிறேன். நீங்களும் வந்து பிரசாரம் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தாராம். அதை ஏற்றுக் கொண்ட சேலம்காரர் கண்டிப்பாக உங்களுக்காக நான் நேரடியாக வந்து வேலூரில் தங்கி பிரசாரம் செய்கிறேன் என்று வாக்குறுதி அளித்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகர மேட்டர் ஒன்றை சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மதுரை மாநகர் மாவட்ட இலை அலுவலகத்துக்கு என புதிய கட்டிடம் கட்ட புறநகர் பகுதியான சமயநல்லூர் பவர் அவுஸ் அருகே 35 சென்ட் இடம் வாங்கப்பட்டது. இங்கு கட்டிடம் கட்ட பூமிபூஜை விழா கடந்தாண்டு ஜூலை 15ம் தேதி நடந்தது. இதில் தெர்மோகோல் அமைச்சர் கலந்து கொண்டார். இதில், சேலமும், தேனி விவிஐபிக்களும் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில், ‘‘தமிழகத்தில் சேலத்துக்கு அடுத்து, மதுரை மாநகரில்தான் கட்சி அலுவலகம் கட்டப்படுகிறது. விரைவில் கட்டப்படும் இந்த புதிய கட்டிட அலுவலகத்தை சேலம், தேனி விவிஐபிக்கள் திறக்க வேண்டும்’’ என தெர்மோகோல் அமைச்சர் பேசினார். இன்றுடன் ஓராண்டாகியும் இன்னும் கட்டுமான பணி கூட துவங்கவில்லை. இடம் தரிசாகத்தான் உள்ளது. சமீபத்தில் மதுரை வந்த சேலம்காரர், கட்சி அலுவலக கட்டுமான பணி எப்படி நடக்கிறது என அமைச்சரிடம் கேட்க அமைச்சர் பதில் கூறாமல் நெளிந்துள்ளார். அது மட்டுமில்லாமல், மதுரை மாநகர் கட்சி அலுவலகத்துக்கான இடத்தை புறநகரில் அதுவும், தொண்டர்கள் எதிர்ப்பை மீறி அமைச்சர் தேர்வு செய்துள்ளார். விழா ஏற்பாடு நடைபெறும்போதே இந்த இடம் வேண்டாம், நகரில் வேறு இடத்தை கட்சிக்காக பெற்று அலுவலகம் கட்ட வேண்டும் என அமைச்சரிடம் கோரினோம். ஆனால் அமைச்சர் அதை கண்டுகொள்ளவில்லை. ஓராண்டாகியும் அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி, இதுவரை கட்டுமான பணிகள் ஏதுவும் நடைபெறவில்லை. தன்னுடைய சுயநலத்திற்காக இந்த இடத்தை அமைச்சர் தேர்வு செய்தது தற்போது தெரியவருகிறது’’ என்று கட்சியினர் வருத்தத்தோடு பேசி வருகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறைதுறை விஜிலென்ஸ் போலீசார் ஓவரா ஆட்டம் ேபாடறாங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வேலூர் மத்திய சிறையில் கடந்த மாதம் சிறைக்குள் தோண்டிய இடமெல்லாம் செல்போன், சிம்கார்டு, சார்ஜர் உள்ளிட்டவை கிடைத்தது. இதில் செல்போன் பயன்படுத்திய கைதி யார் என்பதும், உதவிய காவலர்கள் யார் என்பதும் தெரியாமல் உள்ளது. இதைதொடர்ந்து, சிறையில் நன்னடத்தை கைதி ஒருவர் தோட்டப்பணி முடித்து விட்டு சிறைக்கு செல்லாமல் தப்பியோடி விட்டார். இதன் எதிரொலியாக 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்படட்டனர். இந்த பிரச்னை முடிவதற்குள் அடுத்த தலைவலி தொடங்கியது. வேலூர் மத்திய சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கண்காணிக்க விஜிலென்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பி எழுத்தில் ஆரம்பிக்கும் பெயரை கொண்டவருக்கு கீழே பணிபுரியும் முத்தான பாண்டியும், மன்மதனுடன் சேர்ந்துக் கொண்டு சிறையில் உள்ள கைதிகளை விசாரணை என்ற பேரில் அழைத்து வந்து அடித்து உதைக்கின்றனராம். மேலும் சிறைக்காவலர்களை பணி செய்ய விடாமல், மிரட்டி தங்களுக்கான வேலைகளை செய்து கொள்கின்றனராம்.

சொன்ன வேலையை செய்யாத காவலர்களை பற்றி, ‘பி’ ஆனவர் சிறைத்துறை டிஐஜியிடம் தவறாக சொல்லி அந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாராம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்டோர் ரூமில் இருந்த காவலர்கள், அவர் சொன்ன வேலையை செய்யாததால், அவரை பற்றி அவதூறாக சொல்லி பணியிட மாற்றம் செய்தாராம்.  இவரின் ஆட்டத்தால் சிறைக்காவலர் மட்டுமின்றி கைதிகளும் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனராம். அதோடு பலரும் பணியிடம் மாற்றம் வேண்டும் என மனு அளித்து வருகின்றனராம். இத்தனைக்கும் காரணமான ‘பி’ ஆனவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து பணி முடித்து வரும்போது கைதிகளின் கூட்டாளிகளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தவர் என்பது வேதனையான விஷயம் என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

 • EcuadoranProtest2k19

  பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்