SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கு விளம்பரம் கொடுத்து ரத்து செய்த மர்மத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2019-07-14@ 00:35:38

‘‘சமீபகாலமாக பிரச்னைக்குரிய நகரமாக சேலம் மாறி வருதுபோல...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சேலம் பெரியார் பல்கலைக்கழகத்த மனசுல வைச்சு ஏதோ கேட்க நினைக்கிற... சொல்றேன் கேளு. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பணியிடம் ஒரு வருடமாக காலியாகவே உள்ளது. புதிய பதிவாளரை யுஜிசி விதிகளின்படி உடனடியாக நியமிக்காமல், தனக்கு வேண்டிய ஒருவரை பொறுப்பு பதிவாளராக செயல்பட துணைவேந்தர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறாராம். அந்த பொறுப்பு பதிவாளர் துணைவேந்தருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இரண்டு முறை பதிவாளர் தேர்வு செய்வதற்காக விளம்பரம் செய்யப்பட்டு, துணைவேந்தரே அதை ரத்தும் செய்துள்ளார். அதேபோன்று, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பணியாளர்கள் 7 பேருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்க கடந்த மாதம் நடந்த ஆட்சி குழு கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு முன் வரிசையில் உள்ள 141 பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் இந்த பிரச்னையில் தலையிட்டு யுஜிசி விதிகளின்படி நிரந்தர பதிவாளரை நியமிக்க வேண்டும் என்று அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘அல்வா மாவட்டத்தில் ஏதாவது ஸ்பெஷல் இருக்கா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மக்களவை தேர்தலுக்கு பின்னர் கிப்ட் கட்சியில் உள்ளவர்களை இலைக்கு இழுக்க அந்த தலைமை படுவேகம் காட்டியது. அதில் முதலில் கைகொடுத்தது நெல்லை. நெல்லையில் கிப்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் 3 பேரும் கூண்டோடு விலகி இலையில் ஐக்கியமாகிவிட்டார்கள். அதுல முன்னாள் அமைச்சரும் ஒருத்தர். அதனால்தான் இணைப்பு விழாவிற்கு இரட்டை தலைமையும் நேரில் வந்ததாம். நெல்லை மாவட்டத்திற்கு அடுத்தடுத்து 2 விசிட் அடித்த சேலம்காரர், அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தை கையில் எடுத்துள்ளாராம். அங்கு இருப்பவர்களை இலையில் இணைக்க தனி அசைன்மென்ட் கொடுத்துள்ளாராம். நெல்லைக்கு வந்து விட்டு தூத்துக்குடி சென்று தங்கியதன் ரகசியம் இது தானாம். இரவு கட்சியின் முக்கிய பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியவர் கிப்ட் கட்சியை கூண்டோடு காலி செய்ய வேண்டும். அப்போதுதான் சட்டசபை தேர்தலில் நமக்கு எந்த பங்கமும் வராது என்றாராம். அதைக் கேட்ட ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகமாகி விட்டார்களாம். இப்போது முத்துநகரில் ஆள்பிடிக்கும் வேலை தொடங்கியுள்ளதாம்...’’என்றார் விக்கியானந்தா. ‘‘கமிஷனுக்காக ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஆமை வேகத்தில் நடக்குதாமே...’’ என்று கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மாநகராட்சி கடந்த 2016-17ம் நிதியாண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, ₹1,453 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் வேலூர் மாநகரில் 24 மணி நேரம் குடிநீர், மின்சாரம், ஸ்மார்ட் சாலைகள், பொழுது போக்கு அம்சங்கள் என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். பயணிகளுக்கான வைபை வசதி உட்பட நவீன வசதிகளுடன் வேலூர் புதிய பஸ் நிலையம் வடிவமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த பணிகளால் வேலூர் மாநகராட்சி புதுப்ெபாலிவு ெபறும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தேர்வாகி 2 ஆண்டுகளாகியும் 2 சதவீத பணிகள் கூட நடக்கவில்லை.
பெயரளவிற்கு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சிறு, சிறு பணிகள் தொடங்கப்பட்டு, ஆரம்ப கட்டத்திலேயே ஆமை வேகத்தில் நடக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு வேலூர் மாநகராட்சியில் இருந்த அடிப்படை வசதிகள் கூட தற்போது இல்லை என்று வேலூர் மக்கள் புலம்பி வருகின்றனர். எந்த அடிப்படை வசதிகளை கேட்டாலும், ஸ்மார்ட் சிட்டியில் தரமாக நிறைவேற்றப்படும் என்பதே ஒட்டுமொத்த அதிகாரிகளின் பதிலாக இருக்கிறது. இதையே காரணம் காட்டி பராமரிப்பு பணிகள் எதையுமே அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.எந்த பணியாக இருந்தாலும் போட்டி போட்டுக் ெகாண்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் விட்டு அதிகாரிகள் கமிஷன் பார்த்து உடனடியாக பணிகளை முடித்து விடுவார்கள். ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்தபோதிலும் எந்த வகையிலும் கமிஷன் பார்க்க முடியாது என்ற அச்சத்தால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்வதை தட்டிக்கழிப்பதிலேயே அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதே வேலூர் மாநகரில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.‘‘வீடுகளை விட கோயில் சிலைகளுக்கான பாதுகாப்பை தான் அதிகரிக்க வேண்டியிருக்கும் போல...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘பழநி மலைக்கோயில் ஐம்பொன் சிலை முறைகேடை தொடர்ந்து மற்றொரு படை வீடான திருப்பரங்குன்றத்திலும் ஒரு பிரச்னை பரபரப்பாக போய்ட்டிருக்கு. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி சுவாமி கோயிலுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 2 உபயதாரர்கள், படிக்கட்டில் பொருத்துவதற்காக கிலோ கணக்கில் பித்தளை தகடு, வெள்ளித்தகடுகளை தானமாக வழங்கினாங்க. பல லட்சம் மதிப்புள்ள இந்த தகடு காலில் குத்தி பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால தகடுகளை அகற்றிட்டாங்களாம். இது தற்போது கோயில்ல இல்லையாம்.... அது மட்டுமல்ல... கோயில் தங்கத்தேருல தங்கமணிகளையும் காணலையாம்... இதை ஒரு பக்தர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு புகாராக அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிர்வாக தரப்பினர் கோயிலில் உள்ள சில ஊழியர்கள்தான் இந்த பிரச்னையை வெளியில சொல்றாங்கன்னு நினைச்சு, அவங்க செல்போனை வாங்கி வச்சுக்கிட்டாங்களாம்... போனுக்கு வரும் அழைப்புகளையும் நோட்டமிட்டாங்களாம்... எல்லா தகவல்களையும் அழித்து விட்டுத்தான் செல்போனை திருப்பி தந்திருக்காங்கப்பா... அதுமட்டுமல்ல... ‘‘இங்குள்ள ரகசியங்களை வெளியே சொன்னால், உங்களுக்கு மெமோ கொடுத்து வேலையை காலி செய்து வீட்டிற்கு அனுப்பிவிடுவோம்’’ என்றும் எச்சரிக்கை விட்டுருக்காங்களாம்... ஏற்கனவே ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிச்சுமையில் இருக்கும் ஊழியர்கள், தற்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறாங்களாம்.... சில அலுவலர்கள் இந்த அளவிற்கு ராணுவ கட்டுப்பாட்டை ஊழியர்களிடம் காட்டுவதை பார்த்தால், இங்கும் முறையான விசாரணை செய்தால் பல விஷயங்கள் வெளிவரும் போல என பக்தர்கள் பரபரப்பாக பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்