SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லேப்டாப் வழங்கக்கோரி கலெக்டரை முற்றுகை

2019-07-13@ 00:59:35

தேனி:  தமிழக அரசு கடந்த 2017-2018ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கவில்லை. நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இலவச லேப்டாப்களை  வழங்கி வருகிறது.   எனவே, தங்களுக்கும் லேப்டாப் கோரி முன்னாள் மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 8ம் தேதி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு லேப்டாப் கேட்டு போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி  போலீசார் கைது செய்தனர்.
நேற்று தேனி, அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு, கடந்த 2017-2018ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் லேப்டாப் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேனி மாவட்ட கல்வி அலுவலகம் வந்த கலெக்டர்  பல்லவி பல்தேவ் காரை மாணவர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டரிடம் தங்களுக்கு லேப்டாப் வழங்காதது குறித்து தெரிவித்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துச் சென்றார். பின்னர் மாணவர்கள் கலைந்து  சென்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்