SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடியில் ரூ.634 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

2019-07-13@ 00:42:45

சென்னை: தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின்  தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய சிப்காட் நிறுவனம் மூலம் ₹634 கோடி  செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்று முதல்வர்   எடப்பாடி கூறினார்.
பேரவையில் நேற்று பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படித்த அறிக்கை: உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி முதலீடுகளை ஈர்க்க `யாதும் ஊரே’’ என்ற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் ரூ.60 லட்சம் செலவில் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிட ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, சீனா, தைவான், பிரான்சு, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கென  தனித்தனியாக சிறப்பு அமைவுகள் அமைக்கப்படும். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பிரிவு ஒன்று துவங்கப்படும்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 20 ஏக்கர் அல்லது அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்களுடன் தொழில் முதலீடு செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களை  இணைக்கும் பாலமாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஒரு வலைதளம் உருவாக்கப்படும்.  `தொழில் தோழன்’’ என்ற தொழில் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். . தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, தூத்துக்குடி மாவட்டம், முல்லக்காடு கிராம பகுதியில் ரூ.634 கோடி திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60  மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை சிப்காட் நிறுவனம் அமைக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம்-வடகால் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பூங்காக்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தொழிற்கூட கட்டிடங்கள், தலா ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். கோயம்புத்தூரில் கூடுதலாக ஒரு தொழில்நுட்ப வளாகம் ரூ.200 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும்.  காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு பூங்காவில் நிறுவப்பட உள்ள உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான  சிறப்பு மையம் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் நிறுவப்படும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

 • moon27

  பெரிய நிலவுக்கு போட்டியாக 3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா!: அதிசய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்