SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்; பக்தர்களுக்கு அனுமதி இல்லை

2019-07-12@ 16:52:07

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம் செய்தார். குடியரசு தலைவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரசித்திபெற்ற அத்திவரதர் வைபவம் நடைபெறுகிறது. அத்தி வரதரை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். உலகிலேயே அத்திவரதர் மட்டுமே 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பதால் பக்தர்கள் தரிசனத்துக்காக லட்சக்கணக்கில் திரண்டு வருவார்கள்.

காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் ஜூலை 1ம் தேதி தொடங்கி அத்தி வரதர் வைபவம் ஆகஸ்ட் 17 ம் தேதிவரை முடிவடைகிறது. இந்நிலையில் இன்று இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்தி வரதரை தரிசனம் செய்தார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை 10 மணி முதல் மேற்கு கோபுரம் வழியாக விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

ராம்நாத் கோவிந்த் வந்து சென்ற பிறகு மாலை 5 மணிக்குப்பின் விஐபி தரிசனம் நடைபெறும். அதே நேரத்தில் பொதுமக்களுக்கான கிழக்கு கோபுர வாயில் பகல் 1 மணி வரை திறந்திருந்தது. 1 மணிக்கு பிறகு கிழக்கு கோபுரம் நுழைவாயில் மூடப்பட்டு 2 மணிக்குள்ளாக பக்தர்கள் தரிசனம் முடித்துவிட்டு வெளியேறினர். குடியரசுத் தலைவர் வருகையால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

ஜனாதிபதி வருகையை ஒட்டி பாதுகாப்புக்கு 2,700 போலீசார்காஞ்சிபுரத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள சுமார்  2,700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் வளாகம், டோல்கேட், தற்காலிக பேருந்து நிலையம், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

  • bangladeshtrain

    வங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்!

  • wildfireaus

    காட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்

  • hongkongprofire

    ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

  • chicagosnow

    பனிப்பொழிவின் உச்சத்தில் சிகாகோ: 6 அங்குலத்திற்கு பனிப்போர்வை படர்ந்து காட்சியளிக்கும் நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்