SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிஜிட்டல் சேவை கட்டணங்கள் ரத்து செய்தது எஸ்பிஐ வங்கி

2019-07-12@ 16:36:23

மும்பை : இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) திகழ்கிறது. கடந்த மார்ச் 31ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி எஸ்பிஐ வங்கியில் இண்டர்நெட் பேங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 6 கோடி பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மொபைல் பேங்க் சர்வீஸை 1.41 பயன்படுத்துவதும் தெரியவந்தது. அத்துடன் எஸ்பிஐ வங்கியின் மார்க்கெட் பங்குகள் 18% மொபைல் பேங்கிங் மூலம் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது.

அதுமட்டுமின்றி எஸ்பிஐ-யின் டிஜிட்டல் செயலியான யோனோ (YONO) மூலம் ஒரு வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT), உடனடி கட்டனை சேவை (IMPS) மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் ‘நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல் (RTGS) ஆகியவற்றின் சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய திட்டமிட்டது.

ஆலோசனைப்படியே தற்போது, தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT), உடனடி கட்டனை சேவை (IMPS) மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல்(RTGS) ஆகியவற்றின் சேவைக்கட்டணத்தை ரத்து செய்து அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்தச் சேவைகளை வங்கி கிளைகளின் மூலம் செய்தால் 20% சலுகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்